07-25-2004, 01:31 PM
[b]அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்பு?
ஐ.ம.சு.மு. அமைச்சின் முக்கிய அமைச்சரும் ஜனாதிபதியின் சொந்தச் சகோதரருமான அநுரா பண்டாரநாயக்கவுடன் சிங்கப்பூர் பயணமாகிய கருணா, சிங்கப்பூரில் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடாத்தவுள்ளதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் பிரதிநிதிகள் ஒழுங்கு செய்துள்ள ஒரு முக்கிய மாநாட்டில், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் குறித்த ஒரு உரையொன்றை, கருணா ஆற்றவுள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.
அமைப்பிற்கெதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டமை, பெண்களுடன் தொடர்பு, தலைமைக்கெதிராக இரகசியமாகச் செயற்பட்டமை உட்பட பல குற்றச் செயல்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா, அதன்பின்னர் தனது சுயநலனுக்காகப் பிரதேச வாதத்தை கவசமாகப் பயன்படுத்தினாலும், ஒருசில நாட்களில் தோல்வி கண்ட கருணாவுக்கு சந்திரிகா அரசின் நெருங்கிய இரகசியத் தொடர்புகள் இருந்தமை ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி சந்திரிகா அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான அநுரா பண்டாரநாயக்கா, சிங்கப்பூர் சென்றபோது, அதே விமானத்தில் கருணாவும் பயணித்துச் சென்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்றுள்ள கருணாவை, ஏற்கனவே அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா தொடர்பூடக அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் கொழும்பு திரும்பும் வழியில், சிங்கப்பூரில் தரித்து, முக்கிய சந்திப்பொன்றை கருணாவுடன் நடாத்தவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
இது தவிர, சிங்கப்பூரில் கருணா தங்கியிருக்கும் போது, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிகளுடனான விசேட கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் குறித்த தலைப்பில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது.
கருணாவின் உரை அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவமற்றதாக இருப்பினும், கருணாவை தங்கள் வலையில் வளைத்துப் போடும் நோக்கில், அவரையும் உரையாற்றப் பணித்துள்ளதாகவும், கருணாவை அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நபராக மாற்றியெடுப்பதன் மூலம், திருகோணமலையைப் பெற்றுக்கொள்வது உட்பட, வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரித்து, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பலவீனப்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும் கருதப்படுகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>