07-25-2004, 12:19 PM
Kanthar Wrote:சரி இன்னொரு கேள்வி பூந்து விளையாடுங்கோ
எங்கடை ஊரில ஒரு குளம் இருக்கு, அதை அத்துளு எண்டுவம். குளம் கொஞ்சம் வித்தியாசமானது. வடக்கு, கிழக்கு , மேற்கு, தெற்கு எண்டு நாலு பகுதியா பிரிஞ்சு வேறை கிடந்தது. கிழக்கும் தெற்கும் மேற்கும் கூட்டாகவும் வடக்கு தனியாகவும் இருந்ததுதான் அத்துளு குளத்தின் விசேடம்.
கிழக்கில பூக்கத் தொடங்கும் தாமரை கிழக்கை நிறைச்சு, பின் தெற்கை நிறைச்சு, பின் மேற்கை நிறைக்க 90 நிமிசங்கள் எடுக்கும்.
வடக்கு பகுதியிலோ பூக்கிற பூவின்ரை மடங்கோ ஒவ்வொரு நிமிசமும் மூண்டு மடங்கால் (3, 9, 27, 81 ...) கூடிக்கொண்டு போய் 90 நிமிசத்தில் அந்த பகுதி நிறையும்.
ஆனால் வடக்கில் நடந்த பூக்கும் மடங்கு மற்ற மூண்டு பகுதியில் தலை கீழாக இருந்தது.
அதாவது 90வது நிமிச முடிவில் 3 பூவும், 89 நிமிச முடிவில் 9 பூவும், 88 நிமிச முடிவில் 27 பூவும் ........எனவும் இருந்தது.
கேள்வி இதுதான்
முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?
இளங்கோ
கிழக்கு நிறைஞ்சு பின் தெற்கு நிறைஞ்சு பின் மேற்கு நிறையும்
அதோடை வடக்கு தவிர அந்த மூண்டும் சமபகுதிகள் எண்டதையும் கவனிக்க.
கிருபன்
உங்கள் விடை சரி வழமைபோல விளக்கத்தையும் விலாவாரியா தந்து பாராட்டை இரட்டி மடங்காக்கி பெற்றுக் கொள்ளுங்கள்.

