07-25-2004, 02:58 AM
Mayuran Wrote:இது உண்மை..sayanthan Wrote:ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..
சயந்தன் நீங்கள் விரும்புவது போல ஒரு சம்பவம் அண்மையில் சுவிற்சர்லாந்துநாட்டின் பாசல் மாநிலத்தில் நடை பெற்றுள்ளது.
.
சுவிற்சர்லாந்தின் முதலாவது இந்து ஆலயம் என்ற பெருமையோடு இயங்கி வந்த பாசல் சித்தி விநாயகர் ஆலயமும் பாசல் முற்றன்ஸ் இராஜராஜேஸ்வரி ஆலயமும் பாசல் சுப்பிர மணியர் ஆலயமும் பாசல் வாழ் மக்களின் பெருவிருப்பிற்கிணங்க பாசல் தமிழ் மன்றத்தின் பெருமுயற்சியில் மூன்று ஆலயங்களும் இணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இந்து ஆலயம் என்ற பெயரில் கடந்த ய10ன் மாதம் முதல் தாயகம் நோக்கிய சிந்தனையோடு இயங்கி வருகின்றது.;
நேற்றைய தினம் (23.7.2004) வருடாந்த மகோற்சவம் வெகுசிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இம் மூன்று ஆலயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டமையால் மூன்று கோவில்களுக்கென செலவான மக்களின் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி மயூரன் அண்ணா.. நானும் இதை தான் சொல்லவந்தேன்..... கீழே உங்கள் கருத்து இருக்கிறது....
இன்னும் சில நாட்களில் பாசல் தமிழ் மன்றத்தின் இணையத்தளம் இணைய உலகில் சஞ்சரிக்க இருக்கிறது..... என்பதும் குரிப்பிடத்தக்கது.
[b][size=18]

