07-24-2004, 10:47 PM
Mathivathanan Wrote:<b><span style='font-size:30pt;line-height:100%'>83 கலவரங்களுக்காக அப்போதைய அரசியல் தலைமை தமிழ்மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்
</span>
[size=24]கண்டி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனி யார் கல்லு}ரியின் 150 ஆவது ஆண்டு பரிச ளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
</b>
பகிரங்க மன்னிப்பு
அன்று இத்தகைய வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்ட அரசியல் குழுக்களோ, தலை மைத்துவங்களோ இன்றுவரை தேசிய hPதியா கவோ, பகிரங்கமாகவோ மன்னிப்புக் கோர வில்லை, எனினும், 50 ஆவது சுதந்திர தின விழாவில் இதற்காகத் தாம் மன்னிப்புக் கோரி யுள்ளார் என ஜனாதிபதி கூறினார்.
அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
தமிழ்மக்கள் மீதான வன்செயல்கள் வடக் கிலும் கிழக்கிலும் 30 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகின. சிலர் வன்முறையில் நாட்டை ஆள எத்தனித்தார்கள். ஆனால், அவை இன்னும் தொடரும் நிலையிலேயே காணப்படுகின்றன. இத்தகைய வன்முறையால் ஜனநாயகத்துக்கே பாதிப்பு ஏற்பட்டது. கறுப்பு ஜூலையும் இவ்வாறு உருவாக்கப்பட்ட வன்முறைகளில் ஒன்றாகும். இவை காரணமாக 7 லட்சம் தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறும் நிலை உருவானது. நாடே இக்கட்டான நிலைக்கத் தள்ளப்பட்டது.
ஜூலைக் கலவரம்
எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் வெளி யேறியதால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம். சிலர் தமக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை வழங்கக் கோரியபோது வீடுகள் எரிக்கப்பட்டன. ஜூலைக் கலவரத்தை நாம் மீண்டும் பின்நோக் கிப் பார்க்கவேண்டும். கொழும்பில் வீடுகள் எரி வதை நான் நேரடியாகவே பார்த்தேன். இந்த அநியாய அக்கிரமச் செயல்களுக்கு மன்னிப் புக் கேட்பதைத் தவிர வேறுவழியில்லை. அதே வேளையில் நாட்டை ஆண்டவர்கள் நினைத்தி ருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி அவர்கள் செயற்படவில்லை.
கல்வியே துணை
இந்நாட்டை சீராக இட்டுச்செல்ல கல்வியே துணையாக அமையும். எனவேதான் கல்வியில் புதிய திட்டங்களை வகுக்க அந்த அமைச் சுப் பொறுப்பை நானே வைத்துக்கொண்டேன்.
கல்வி என்பது ஆசிரியர்களின் கைகளி லேயே தங்கியுள்ளது. இன்றைய கல்வித்திட் டத்தில் பல குறைபாடுகள் உண்டு.
அனைத்து மதங்களையும் மதிக்கத்தக்க சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். இது இன்றைய கட்டத்தில் முக்கிய தேவையாகும்.
இன்று சமூகத்துக்கு ஒவ்வாத குற்றச்செயல் கள் அதிகரித்து வருகின்றன. ஊடகங்கள் மிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தனி யார் ஊடகங்களுக்கு நாம் சில கட்டுப்பாடு களை விதித்தோம். ஆனால், அது புூரணமா கக் கடைப்பிடிக்கப்படவில்லை.
வன்முறையற்ற கலாசாரம்
இன்று எமக்குத் தேவைப்பட்டது வன்முறை யற்ற கலாசாரமே. பாடசாலை மாணவர்கள் மீது பெற்றோர்கள், ஆசிரியர்கள் முக்கிய கவனம் எடுப்பது காலத்தின் தேவையாகும்.
வன்முறையற்ற கலாசாரத்தைப் பின்பற் றும் சமூகத்தை உருவாக்குவதே அவசரமான பணியாகும். முப்பது வருட கால வன்முறைக் கலாசாரத்தைக் கண்டும் கேட்டும் நன்கு அனு பவித்துவிட்டோம். பயங்கரவாதம் மூலம் எத னையும் சாதிக்க இயலாது. அனைத்தும் பேச்சுக் கள் மூலமே தீர்க்கப்படவேண்டும்.
சர்வாதிகார ஹிட்லரின் நடவடிக்கையால் யுூதர்களும் அழிக்கப்பட்டு இறுதியாக அவரும் அழியுண்டார். இதனை நாம் படிப்பினையாகக் கொள்வது பொருத்தமாகும். இப்படி அவர் மேலும் தெரிவித்தார். [/color]
[quote=kavithan]<img src='http://www.thinakural.com/2004/July/24/cartoon.gif' border='0' alt='user posted image'>
நன்றி
தினக்குரல்
Truth 'll prevail

