07-24-2004, 05:29 PM
<b>இடைக்காலத் தன்னாட்சி இன்றேல்
சுதந்திரத் தனி ஆட்சியே அமையும்
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஒன்றுகூடித் தீர்மானம் </b>
இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபை வழங்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் வெற்றி தமிழ்த் தேசியத்திற்கே. அரசு தானாக வழங்கினால் அது இடைக்காலத் தன்னாட்சி நிர்வாக சபையாக இருக்கும். இல்லையேல் சுதந்திரத் தனி ஆட்சியாக அது அமையும்.
'இவ்விடயத்தில் வடக்கு-கிழக்கு மாகாண மக்களிடமோ அரசியல்வாதிகளிடமோ எந்த வகை யான மாற்றுக்கருத்துக்களோ பிரதேச முரண்பாடுகளோ இல்லை. 'தமிழ்த் தேசியம் ஒன்றை உருவாக்குவதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக் கின்றோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு - கிழக்கு மாகாண எம்.பிக்கள் அனைவரும் ஒரே குரலில் இவ்வாறு சூளுரைத்தனர்.
நேற்றுக்காலை நாடாளுமன்றக் குழு அறை யில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் கூட்டாக இந்தக் கருத்தைக் வெளி யிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டணி உறுப்பி னர்களான தங்கேஸ்வரி கதிர்காமநாதன், அரிய நேந்திரன், ஜோசப் பரராஜசிங்கம், ஜெயானந்த மூர்த்தி, கனகசபை பத்மநாதன், திருகோண மலை மாவட்ட எம்.பியான துரைரட்ணசிங்கம் ஆகியோருடன் யாழ். மற்றும் வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து சில தமிழ்த் துரோகக் கும்பல்கள் பிரதேசவாதத் தைத் து}ண்டிவிட்டுத் தமிழ் தேசியத்திற்கு வேட்டுவைக்க முனைந்தன. ஆனால், கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமா கப் பிரதேசவாதத்தைச் சுட்டுப் பொசுக்கி சாம்ப ராக்கிவிட்டனர். எந்த ஒரு சக்தியாலும் வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ்த் தாயகக் கோட்பாட்டை அழித்து விடமுடியாது. 1957ஆம் ஆண்டில் செய்துகொள் ளப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந் தத்திலும், 1967இல் செய்து கொள்ளப்பட்ட டட்லி - செல்வா ஒப்பந்தத்திலும் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய தயாகக் கோட்பாடு 50 வருடங் களுக்கு மேல் பழைமையானது. இது ஒன்றும் புதியதல்ல.
அண்மைக் காலங்களில் சிறுசிறு நிகழ்வுக ளால் பதற்றம் ஏற்பட்டிருந்தபோதும், இன்று எந்தவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இட மில்லை.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையிலான தேசியத் தமிழ்த் தாயகத்தை மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் ஏகமனதாக அங்கீகரித்துவிட்டனர். எமக்குள் வடக்கு - கிழக்கு என்ற பேதம் இல்லை.
பிரித்தாள முயலும் அரசும், அதன் கைக் கூலிகளும் வடக்கு - கிழக்கு மாகாண மக்க ளுக்கிடையில் ஐக்கியம் இல்லை; நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என விசமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதில் எந்த உண்மையும் இல்லை என் பதை வெளிப்படையாகத் தென்பகுதி இனவாத அரசியல்வாதிகளுக்கும், தமிழ்த் தேசியத்தை விரும்பாத துரோகக் கும்பல்களுக்கும் தெளிவு படுத்துவதற்காகவே இன்று ஒரே மேசையில் தோன்றி எமது உறுதித் தன்மையை வெளிப் படுத்துகின்றோம்.
- இப்படி மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக் கள் அங்கு தெட்டத்தெளிவாகக் கூறினர்.
கிழக்கு மாகாணத் தாய்மார் தமிழ்த் தேசி யத்திற்காகவே தலைவர் பிரபாகரனிடம் வீட் டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படைத்தனர். பிர தேசவாதத்தைத் து}ண்டும் துரோகிகளுக்கு அல்ல என்பதை நடந்து முடிந்த நாடாளுமன் றத் தேர்தலின்போது மக்கள் தீர்ப்பாக வெளிப் படுத்தியுள்ளனர். வடக்கையும், கிழக்கையும் எந்தச் சக்தியா லும் பிரிக்கமுடியாது; பிரிக்கவும் விடமாட்டோம்.
- இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சூழுரைத்தனர்
----------------------------------
<b>விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவேண்டும் என்ற பொதுஜன அபிப் பிராயமே தமிழ்நாட்டில் மேலோங்கிநிற்கிறது.</b>
சென்னையில் உள்ள லொயோலாக் கல் லு}ரி இந்தியப் பொதுத் தேர்தல்களை அடுத்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது.
புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று 54.2 வீத பொதுமக்களும், தடையை நீக்கக் கூடாது என்று 45.8 வீதமானோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசியலில் பிந்திய நிலைவரத்தை யும், வேறுசில அரசியல் சட்ட விவகாரங்கள் பற்றியும் மக்களின் எண்ணங்களை அறியும் நோக்கோடு இக்கருத்துக்கணிப்பு மேற்கொள் ளப்பட்டது.
பயங்கரவாதச் தடைச் சட்டம் எனும் 'பொடா|| சட்டத்தை இந்திய மத்திய அரசு நீக்க வேண் டும் என்பதை 61 வீதமான மக்கள் வரவேற்றுள் ளனர். அவர்களில் 15 வீதமானோர் பயங்கரவா தச் செயல்களைக் கையாளும் விதத்தில் தற் போதைய சாதாரண சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரினர்.
நன்றி உதயன் 24-07-2004