06-18-2003, 04:59 PM
சந்திரிக்கா, ரணிலின் விருப்பம் நான்காம் கட்ட ஈழப்போரா?
விடுதலைப்புலிகளுக்கும், அரசிற்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 16 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களின் காவலர்களான விடுதலைப்புலிகளுக்கும் எதிரான கெடுபிடிப் போக்கினை அரசும் அரசபடைகளும் தொடர்ந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக கடந்த சனிக்கிழமை (14.06.2003) முல்லைத்தீவுக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகளின் எண்ணெய்க் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டதுடன் அதில் பயணம் செய்த போராளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய இச்சம்பவம் அப்பட்டமான போர் நிறுத்த மீறலாகும். இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கூட அறிய முடியாத நிலையில் அரசு திணறுவதைக் காணமுடிகின்றது.
தமிழர்களின் பலமும் பாதுகாப்பும் விடுதலைப்புலிகள் மட்டுமே. விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையிலேயே போர்நிறுத்தத்தை மேற்கொண்டு சமாதானப் பேச்சுக்களுக்கு வந்தனர். யுத்தச் சூழலில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களைக் கருத்திற் கொண்டே விடுதலைப்புலிகள் இந்த முடிவுகளை எடுத்தனர்.
ஆனால் போர் நிறுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்ட போதிலும், போராளிகளை இழக்கவேண்டி வந்த போதிலும், போராளிகள் அவமானப் படுத்தப்பட்ட போதிலும் புலிகள் தொடர்ந்து பொறுமை காத்து வந்தனர். ஆனால் விடுதலைப்புலிகளின் பொறுமையைச் சோதிக்கும் நடவடிக்கைகளும் அவர்களின் பலத்தைக்குறைக்கும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
விடுதலைப்புலிகள் பலமாக இருந்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கு அரசு இறங்கி வறந்தது. விடுதலைப்புலிகளின் பலம் இழக்கப்பட்டால் தமிழர்களுக்கு விமோசனவே இல்லை ஏனவே முல்லைத்தீPவுச் சம்பவமே இறுதிச் சம்பவமாக இருக்கட்டும். யுத்தம் மூலமே தமழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென அரசாங்கம் உண்மையிலேயே நினைக்குமானால் விடுதலைப்புலிகள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபட்டு தமது பலத்தையும், தமிழர் பலத்தையும் உலகறியச் செய்ய வேண்டும். எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அத்தகைய முடிவை எடுப்பாரானார் தமது மக்கள் தமது முழு ஆதரவையும் தரத் தயாராகவே உள்ளனர்.
பிரித்தாலும தந்திரத்தை பாவித்து தமது நோக்கங்களை நிறைவேற்றலாம். என அரசோ ஏனைய சக்திகளோ நினைத்தால் அதற்கு விடுதலைப்புலிகள் என்றுமே அனுமதிக்கக் கூடாது என்பதையே தமழ் மக்களின் ஏகோபித்த வேண்டுகோள்.
எனவே தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களின் காவலர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றம