07-24-2004, 02:21 AM
கருணா விவகாரத்தால் சபையில் ஏற்பட்ட சர்ச்சை
(அ.நிக்ஸன், ஆர்.பிரியதர்ஷினி)
அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க கருணாவை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் சபையில் உரையாற்றியமை தொடர்பாக அரசாங்கத்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே நேற்று சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவாஜிலிங்கம் எம்.பி. ஆற்றிய உரை ஊடகங்களில் வெளியானமையினால் அனுரா பண்டாரநாயக்கவின் உயிருக்கு ஆபத்து என்றும் ஆதாரம் இன்றி சிவாஜிலிங்கம் எம்.பி. சபையில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தமை அனுரா பண்டாரநாயக்கவின் சிறப்புரிமை மீறல் எனவும் அரச தரப்பு உறுப்பினர் மேவின் சில்வா சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பியபோதே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சபாநாயகரின் அனுமதியுடன் மேற்படி சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய மேவின் சில்வா, விடுதலைப்புலிகளினால் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு ஏற்கனவே ஆபத்துள்ளது. அவரது சகோதரியும் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புலிகளின் தற்கொலைத்தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்தப்பினார். ஆனாலும் அவரது கண் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிவாஜிலிங்கம் எம்.பி.யின் மேற்படி ஆதாரம் அற்ற உரையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகம் ஒன்று பெரிதுபடுத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு சிவாஜிலிங்கம் எம்.பி.யின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, சபையின் நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத விடயத்தை மேவின் சில்வா பேசுகின்றார். அனுரா பண்டாரநாயக்க சபையில் இல்லாத வேளை அவர் சார்பாக சிறப்புரிமை பிரச்சினையை எழுப்ப முடியாது என்றார்.
அதற்கு ஆவேசமாக பதிலளித்த மேவின் சில்வா எம்.பி.உங்கள் கட்சியின் எம்.பி. அலிசாஹிர் மௌலானா கருணாவை மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு அழைத்து வந்ததாக கருணாவிடமிருந்து தப்பிச் சென்ற பெண் போராளிகள் தகவல் வெளியிட்ட போது எங்கள் கட்சியோ அல்லது அரசாங்கமோ அதனை பெரிதுபடுத்தவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் மனோ விஜயரட்ன, சிவாஜிலிங்கம் சபையில் கூறியமை அவரின் தனிப்பட்ட கருத்து. அது எதிர்க்கட்சியினதோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினதோ கருத்தல்ல. அத்துடன் மேவின் சில்வா எழுப்பிய பிரச்சினை சிறப்புரிமை மீறல் அல்ல. அது அனுரா பண்டாரநாயக்க பற்றிய தனிப்பட்ட கூற்று என்றார்.
மௌனமாக இவற்றை அவதானித்த சபாநாயகர், இந்த விடயத்தை தவிர்த்துக்கொள்வோம்; சபை நடவடிக்கைகளை தொடருவோம் என்றார்.
-வீரகேசரி