07-23-2004, 07:52 PM
அப்பாவுக்கு பிறந்தநாள் என்று கடைசி நிமிடத்தில் அறிந்த ஒரு பதினாறு வயது வாலிபன், வாழ்த்து அட்டை விற்கும் கடையில் "அப்பாவிற்கு மகன் " என்னும் தலைப்புள்ள வாழ்த்து அட்டையை வாங்கி அவசரமாக கையெழுத்திட்டுக்கொடுத்தான். மறுநாள் அப்பா அதைபடித்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நானும் இப்போது உங்களைப்போல அப்பாவாகிவிட்டேன். இதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்."என்று இருந்தது


