Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்தக் கரும்புலிகள்...!
#8
விடுதலைப் போரின் தடை நீக்கிகள்
கரும்புலிகளுக்கு தலைவர் புகழாரம்
விடுதலைப் போராட்டத்தின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் எழுந்த தடைகளைத் தகர்த்து, விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்கள் கரும்புலிகள் இவ வாறு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கரும்புலிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 5-7-2001 அன்று, கரும்புலிகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற்கரும்புலியாகி தன்னைத் தற்கொடையாக்கிய கப்டன் மில்லர் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பிற்பகல் 7:05 மணிக்கு பொது ஈகைச்சுடரை ஏற்றி, கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, கரும்புலிகளின் போராட்டப்பங்களிப்பை புகழ்ந்து உரையாற்றினார்.
இன்று நாம் கொண்டாடுவது துக்கதினம் அல்ல. ஒவ வொரு தமிழனும் பெருமைப்படவேண்டிய பெருமைக்குரிய நாள். உலகத்திற்கே தமிழர்கள் யார்? என்பதை அறியவைத்த நாள். இவ வளவு காலமும், தமிழர்கள் - சிங்களவர்களைப் பொறுத்து, கள்ளத்தோணிகள் என்றும், உலகத்தவர்களைப் பொறுத்து, வெறும் கூலித்தமிழர்கள் என்ற பெயருடனும் வாழ்ந்த நிலை மறைந்து தற்போது தமிழர்கள் என்றால் ஒரு வீரம் மிக்க இனம் என்பதை நினைக்க வைத்த நாள் கரும்புலிகள் நாளாகும். என்று தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறினார்.
இந்தக் கரும்புலிகள் நாள் நிகழ்வில் ஆண், பெண் கரும்புலிகள் பங்குகொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் அவர்கள், எமது இனத்தின் விடுதலைக்கான தாங்கு தூண்களாக பலமான சக்திகளாகவே கரும்புலிகள் இயங்கி வருகின்றனர். என்று கரும்புலிகளின் போராட்டப்பங்கை எடுத்துக் கூறினார்.
மேலும் அங்கே தலைவர் உரையாற்றுகையில், இனி வருகின்ற காலத்திலும், எழப்போகின்ற தடைகளைத் தகர்த்து விடுதலையை வென்றெடுக்கின்ற பலம் பொருந்திய போராட்டசக்தியான கரும்புலி அணியாகிய நீங்கள் இலட்சியத்திற்காக எடுத்துக்கொண்ட பணியை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவை கருதி, காலத்திற்குக் காலம் தலைவர் பிரபாகரன் அவர்கள் புதிய புதிய போருபாயங்களை வரைந்து நடைமுறைப்படுத்தி போராட்டத்தை வளர்த்து வருகின்றார். இத்தகைய போருபாயங்களில் கரும்புலித்தாக்குதல் மிகமுக்கியமானது.
1987ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிங்களப்படை முகாமிற்கு முதன் முதலில் கரும்புலித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
முதலாவது கரும்புலி களமிறங்கிய யூலை 5ஆம் திகதியை கரும்புலி நாளாகத் தலைவர் அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்.
கரும்புலி வீரர்களின் அதிஉயர் தியாகத்தை வீரத்தைக் கௌரவிக்கும் ஒரு தினமாகவும், இந்த மறத்தமிழ் வீரர்களின் ஆச்சரியமூட்டும் ஆன்ம உறுதியை மக்களுக்கு உணர்த்தும் ஒரு நாளாகவும் கரும்புலி நாள் கொண்டாடப்படுகின்றது.
போராட்டத்தை நசுக்கும் திட்டத்துடன், புலிகள் இயக்கத்தின் இராணுவபலத்திற்கு விலங்கிடும் நோக்குடன் தரையிலும் கடலிலும் எதிரியானவன் ஒரு பெரும் சவாலாக எழும்போது கரும்புலிகள் தங்களது வரலாற்றுப் பணியை ஆற்றுகின்றனர்.
குறைந்த உயிரிழப்புகளுடன் பாரிய வெற்றிகளை அடையவேண்டிய அவசியம் எமது போராட்டத்திற்கு உண்டு.
சிங்கள இனத்துடன் ஒப்பிடும்போது நாம் எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனம். எதிரி இராணுவத்துடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளையும் - மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போர்க்கருவிகளையும் கொண்டுள்ள ஒரு விடுதலை இயக்கம். எனவே எமது தரப்பில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை இயன்றளவு குறைத்தும், அதேவேளை எதிரிக்கு பேரழிவை உண்டுபண்ண வேண்டிய தேவை எமது இயக்கத்திற்கு உண்டு. அப்படி நிகழும்போதுதான் நாம் இலக்கை அடையமுடியும்.
கரும்புலித்தாக்குதல் முறை ஈழத்தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றி வைக்கக் கூடியது.
உலகின் எந்த ஆயுதங்களினாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததுவும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும் உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.
இந்த மனோபலம் ஒரு வீரஉணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்திவரும் சக்தி கொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.
தேசபக்தியையும், வீரஉணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களது மனங்களை ஆழமாக ஊடுருவும்போது எதிரியால் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன் சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
<b>
?

?</b>-
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 07-05-2004, 04:01 PM
[No subject] - by kuruvikal - 07-05-2004, 04:54 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-22-2004, 07:32 AM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:43 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:51 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 07:10 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:20 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 07:24 PM
[No subject] - by tamilini - 07-23-2004, 10:50 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-25-2004, 08:27 AM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 11:08 AM
[No subject] - by Jude - 09-28-2004, 10:40 PM
[No subject] - by Jude - 09-28-2004, 10:50 PM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 01:16 AM
[No subject] - by kavithan - 10-12-2004, 02:54 AM
[No subject] - by Jude - 10-12-2004, 08:24 AM
[No subject] - by shanmuhi - 10-12-2004, 08:38 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:32 AM
[No subject] - by kuruvikal - 10-12-2004, 09:34 AM
[No subject] - by Jude - 10-12-2004, 05:59 PM
[No subject] - by Jude - 10-12-2004, 06:23 PM
[No subject] - by kuruvikal - 10-13-2004, 03:45 AM
[No subject] - by kavithan - 10-13-2004, 04:39 AM
[No subject] - by manimaran - 10-13-2004, 09:19 PM
[No subject] - by Eelavan - 10-14-2004, 08:47 AM
[No subject] - by Jude - 10-14-2004, 09:38 PM
[No subject] - by kuruvikal - 10-15-2004, 12:27 PM
[No subject] - by Jude - 10-17-2004, 06:14 PM
[No subject] - by Sabesh - 10-17-2004, 07:00 PM
[No subject] - by kuruvikal - 10-17-2004, 08:31 PM
[No subject] - by Jude - 10-18-2004, 07:00 PM
[No subject] - by kavithan - 10-18-2004, 11:08 PM
[No subject] - by Sabesh - 10-19-2004, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)