07-23-2004, 01:48 PM
புலிகள் - அரசுக்கு இடையே நேரடிப் பேச்சுக்களை நடத்த உதவுவதற்கு இந்திய அரசு மறுப்பு
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுவதற்கு இந்திய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
சமாதான முயற்சிகளில் அனுசரனை வழங்கிவரும் நோர்வேயை இந்த முயற்சிகளில் இருந்து தவிர்க்கும் நோக்கத்தோடு விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவவேண்டும் என்று சிறிலங்கா தலைமை அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்திருந்த கோரிக்கையை இந்திய தலைவர்கள் நிராகரித்து விட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்திருக்கிறது.
விடுதலைப் புலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் காரணத்தால் இந்த முயற்சியில் இந்திய அரசாங்கத்தினால் சட்டாPதியாக மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜே.என்.டிக்ஷித் ஆகியோரும் மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் ஆசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் கூடுதல் ஒத்துழைப்பு வழங்க இந்திய தலைவர்கள் உறுதியளித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வு தகவல்களை சிறிலங்காவுடன் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உறுதியளித்திருக்கிறார்.
இதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு துறையின் நடவடிக்கைளை துல்லியமாக கண்காணிக்கும் வல்லமை கொண்ட நவீன தொழில் நுட்ப உபகரணங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருவது போன்ற பல தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை சிறிலங்கா படைத்துறைக்கு தெரிவித்திருப்பாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>