07-23-2004, 12:49 PM
பெரும்பான்மையினை நிரூபித்து சபாநாயகரை மாற்றுவோம்
என்று சவால் விட்ட அரசு மௌனம்
இந்திய பருப்பை அன்று எதிர்த்த ஜே.வி.பி. இன்று ஆதரவு
கோருவது வேடிக்கை என்கிறது ஐ.தே.க.
(எஸ்.ஸ்ரீகஜன்)
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்போம் என்றும் சபாநாயகரை மாற்றுவோம் எனவும் சவால்விட்ட அரசாங்கம் இன்று மௌனமாகவுள்ளது. அரசாங்கம் சொல்வதொன்றாகவும் செய்வதொன்றாகவும் இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
மக்களுக்களித்த வாக்குறுதிகளுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இம்முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எனக் கூறிய அரசாங்கம் அதனை நிறைவேற்றாது, இன்று எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனக் கோருவது வேடிக்கையானது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் எம்.பி.யுமான ரவீந்திர ரந்தெனிய இதனைத்தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க.எம்.பி. அகில காரியவசம், மாகாணசபை உறுப்பினர்களான சுஜீவ சேரசிங்க, புத்திக பத்திரன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் பேச்சாளர் ரவீந்திர ரந்தெனிய மேலும் தெரிவித்ததாவது:
அரசாங்கம் மக்களுக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கின்றது. 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது பெரும்பான்மையை நிரூபிப்போம் என அரசாங்கம் பறைசாற்றியது. சபாநாயகரை மாற்றப் போவதாக கூறியது. அவை எதனையும் செய்யாத அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியினரை பெரும்பான்மையினை நிரூபிக்குமாறு கோருகின்றது.
இதேபோல் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எதிர்கட்சியின் நிலைப்பாட்டினை ஜே.வி.பி.கேட்கின்றது. ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இடைக்கால நிர்வாக சபை குறித்து எதிர்க் கட்சியினரின் கருத்துக்களைப் பெறவேண்டும் என கூறியுள்ளார்.
சமாதான முயற்சியினை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடைக்கால நிர்வாகசபை குறித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது அரசாங்கமே தவிர எதிர்க்கட்சியல்ல. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆற்றிய உரையினை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எனவே இவ்விடயம் குறித்து எமது கருத்தினை தெரிவிக்க முடியாது. பாராளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட விடயம் ஒன்று தொடர்பில் நாம் கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல.
அகில காரியவசம் எம்.பி.
இந்தியாவில் இருந்து பருப்பு, கொத்தமல்லி போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அன்று எதிர்ப்புத் தெரிவித்த ஜே.வி.பி.இன்று இந்தியாவிடம் ஆதரவு கோரும் நிøயில் உள்ளது. இந்தியாவுக்கு பிரதமருடன் விஜயம் செய்த ஜே.வி.பி.அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க இந்தியா பெருமளவு உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக இன்று பேட்டியளித்துள்ளமை வேடிக்கையானது என்று இங்கு கருத்து தெரிவித்த அகில காரியவசம் எம்.பி.கருத்து தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்தித்து உதவி கோரவும் ஜே.வி.பி. இன்று தயாராகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
-வீரகேசரி