07-22-2004, 07:53 PM
ஒரு இளைஞன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிவழியாகச்சென்று கொண்டிருந்தான். ஒரு இடத்தில் யாரோ 13....13.....13 என்று திரும்பத்திரும்ப கத்திக்கொண்டிருப்பது கேட்டது. யார் அந்தப்பைத்தியம் என அந்த இளைஞனுக்கு பார்க்க ஆவலாக இருந்தது.; அங்கு உள்ள ஒரு துவாரத்தினூடாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியை எட்டிப்பார்த்தான். எதிர்பாராத விதமாக உள்ளிருந்து யாரோ அவனது கண்ணை கைவிரலால் குத்திக்காயப்படுத்திவிட்டார்கள். அவன் கண்களை கைகளால் மூடியபடி நடக்க ஆரம்பித்தான். இப்போது அந்தக்குரல் 14... 14.....14 என்று கத்திக்கொண்டிருந்தது.


