07-22-2004, 07:13 PM
[b]திருமலைத் துறைமுகம் மீண்டும் விவகாரமாக்கப்படுகிறது?
கடந்த ஆண்டு ஐனாதிபதி சந்திரிகாவால் அமைச்சுக்களைக் கையகப்படுத்தக் காரணமாகக் காட்டப்பட்ட மணிராசன்குள முகாமும், திருமலைத் துறைமுகச் சுற்றுவட்டாரப் பாதுகாப்பும் பேச்சுவார்த்தைக்கான தடையாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றியுள்ளன.
மணிராசன்குள முகாம் விவகாரத்தை ரணில் அரசைக் கலைப்பதற்கான ஒரு காரணியாகப் பயன்படுத்திய சந்திரிகா, தாங்கள் பதவிக்கு வந்ததும் அவ்விவகாரத்தை கிடப்பில் போட்டிருந்தார்.
ஆனால் சர்வதேச நாடுகளால் நிதிவழங்குவதற்கான நிபந்தனையாக சமாதானப் பேச்சை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை மற்றும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழ்தேச விரோத நடவடிக்கைகளின் பின்னணியில் சிறீலங்கா அரசு செயற்பட்ட விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டமை என்பன சிறீலங்கா அரசை ஒரு இக்கட்டிற்குள் தள்ளியுள்ளது.
இந்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ சமாதானப் பேச்சை ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அரசு அதனைத் தடுப்பதற்கான மாற்றுவழிகளைப் பரிசீலித்து வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
இதனொரு கட்டமாக இந்திய உதவிகளை, கடன் வசதிகளைப் பெறுவதற்கான முயற்சியில் பிரதமரை ஈடுபடுத்தியுள்ள சந்திரிகா, சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறும் முயற்சியில் அநுரா பண்டாரநாயக்காவை ஈடுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, திருமலைத் துறைமுகத்தைச் சுற்றி புலிகள் முகாம்களை அமைத்துள்ளனர் என்றும், திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாகவுமான ஒரு குற்றச்சாட்டை ஐனாதிபதி உத்தியோகபூர்வமாக முன்வைத்து பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலைத் தள்ளிப்போட முனைவதாகத் தெரிய வருகிறது.
இதற்காகவே நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சரை சந்திரிகா அழைத்துள்ளதாகவும், அவர் கொழும்பு வரும் போது இந்தவிடயம் அவருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
கருணா விவகாரத்தில் சிறீலங்காவின் பங்கு ஐயந்திரிபுற நிரூபிக்கப்பட்டமையால் பாரிய புலனாய்வு, இராஜதந்திரத் தோல்வியைக் கண்டுள்ள சிறீலங்கா அரசு அவ்விவகாரத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு முயற்சியாகவும் இதனை மேற்கொள்கிறது என உள்வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியற்துறையினர் திருமலை மாவட்டத்தின் சில இடங்களில் தனியார் வீடுகளில் அமைத்துள்ள சிறிய பணிமனைகளையே முகாங்களாகச் சித்தரித்து மேற்கொள்ளப்படும் இம்முயற்சியில், மணிராசன் குளத்தில் விடுதலைப்புலிகளின் அதிக பிரசன்னம் இருப்பதான சந்தேகமும் வெளியிடப்படவுள்ளது.
குறிப்பாக, திருமலைத்துறைமுகத்தைச் சுற்றிவளைத்து விடுதலைப்புலிகள் முகாங்களை அமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டோடு, துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் நேர்ந்தால் படையினர் தரைமார்க்கமாகப்போக முடியாதபடி விடுதலைப்புலிகள் முகாம்களை அமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்காக விடுதலைப்புலிகளின் அரசியற் பணிமனைகளை சந்திரிகா பயன்படுத்தவுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>