07-22-2004, 04:46 PM
போர் நிறுத்தம் செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்: கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்
போர் நிறுத்தம் செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ட்றொன் புறு}வ் ஹொவ்டே சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரை இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறிலங்கா அரச படைத்தரப்பில் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா அரசு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு போர் நிறுத்தத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சூழலில் போர் நிறுத்த உடன்பாட்டை செம்மையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சிறிலங்காப் படையினரின் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். மட்டக்களப்பில் இடம்பெற்ற போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதிதாக உருவாகி அல்லது உருவாக்கப்பட்டுள்ள ஆயுதக் குழுக்களிடமிருந்து போர் நிறுத்த உடன்பாடு 1.8 புள்ளி சரத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இன்றைய சந்திப்பை முடித்துக்கொண்டு இன்று உலங்கு வானூர்தி மூலம் கொழும்பை சென்றடைந்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் விடுமுறையில் நோர்வே செல்லவுள்ளார்.
இன்றைய சந்திப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும் கலந்துகொண்டனர்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>