07-22-2004, 06:11 AM
ஒரு இரவு பீன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு திருடன் பின்னாள் இருந்து பாய்ந்து சண்டை இட்டான். பீனும் சும்மாவிடவில்லை. முழுப்பலத்துடன் சண்டை இட்டார். சிறிது நேரத்தின் பின் பீன் தோற்றுப்போனார். பீனின் மேல் அவன் ஏறி உட்கார்ந்து அவரது கால்சட்டைப்பையை சோதனை போட்டான். அதில் எதுவும் இல்லை என்று தெரிந்தது. சட்டைப்பையில் மட்டும் 25 சென்ட்ஸ் மண்டும் இருந்தது. கோபங்கொண்ட திருடன் சீ வெறும் 25 சென்ட்ஸ் இவ்வளவு சண்டைபோட்டேன் என்றான். கோபங்கொண்ட பீன் சீ என் காலுறையில் வைத்திருக்கும் 300 டாலருக்காவா நான் சண்டைபோண்டேன் என்றார்.


