07-21-2004, 10:29 PM
kirubans Wrote:kuruvikal Wrote:உண்மை என்றால் எது உண்மை... விளங்காட்டி அது மூடநம்பிக்கை... அனா பப்பில பியர் அடிச்சுக் கூத்துப் போடுறது மட்டும் நல்ல நம்பிக்கை... போங்கடா போங்க ஆருக்கு விடுறியள் கதையளப்பு...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவிகளுக்கு இங்கு பிறந்ததுகள் எல்லாம் பப்பில்தான் குடியிருக்குதுகள் என்றான தப்பான கருத்தை யார்தான் விதைத்தார்களோ?
பல தமிழ் சந்ததிகள் தங்கள் அடையாளத்தை பேண எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.
எங்களில் பலருக்கு சைவ சமயத்தில் தெளிவில்லை. தெரிந்ததெல்லாம், திருநீறு பூசுவதும், பூசை முடிந்ததும் உருண்டை வாங்கிச் சாப்பிடுவதும்தான். இந்த இலட்சணத்தில் எவ்வாறு சமயத்தைப் பற்றி இங்கு பிறந்ததுகளுக்கு விளக்க முடியும்?
அவர்களுக்கு விளங்கப் படுத்தும் கடைமையிலிருந்து வழுவிவிட்டு அவைர்களைப் பப்பில் கூத்தடிக்கிறார்கள் என்பது அசட்டுத்தனத்தைத்தான் காட்டுகிறது.
லண்டனில் பிறந்தால் என்ன ஈழத்தில் பிறந்தால் என்ன எல்லோரும் பூமியில் பிறந்த மனிதர்கள் தான்... தேவை எது என்று தேடுபவன் அறிய வேண்டியதைத் தேடி அறிவான்... யாரும் பக்கத்தில் இருந்து புகட்ட வேண்டும் என்பதல்ல... பப்பில் காலம் கழிக்கினமோ இல்லையோ... பப்பைத் தேடிப் போகத் தெரியுதெல்லா...அதே போல அவர்களா தேட வேண்டும் அப்போதான் அவர்களின் ஆர்வத்திற்கு தீனி போட சிலராவது முன்வருவார்கள்... அதைவிடுத்து எல்லாம் மூடநம்பிக்கை என்று தட்டிக்கழித்தால் என்னாவது. எங்களை பொறுத்தவரையும் நாங்கள் தாயகத்திலேயே பக்கர் முதல் fவைஸ்ரார் கொட்டல் வரைக்கும் போனவர்கள் தான்.... பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி துள்ள வேண்டிய இடத்தில் துள்ளி தேவையானதைத் தேட முனைந்தோமே தவிர எல்லா இடத்திலும் துள்ளிக் கொண்டிருக்கவில்லை....அதேபோல் தேட வேண்டிய இடத்தில் தேடினோம் ஆனால் கிடைத்து சொர்ப்பம் என்றாலும் தேடிக்கொண்டே இருக்கின்றோம்...மூடநம்பிக்கை என்று எங்களளவில் விளங்கிக் கொண்டு தேடலை நிறுத்தவில்லை... மூடநம்பிக்கைகள் என்று விலக்கிய பலதும் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன...அவர்கள் எது உல்லாசம் என்று கருதுகிறார்களோ அவையே இன்று உலகை அழிப்பனவாக இருக்கின்றன... பப்பில் கூத்தடிப்பவர்கள் யார் என்பது எமக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை... நாமே கண்டிருக்கின்றோம்... எங்களைப் பொறுத்தவரை அது ஒரு மூடநம்பிக்கைதான்.... கடையில் அரைவிலைக்கு விற்கும் கோலாவை பப்பில் இரண்டு மடங்கு விலை கொடுத்துக் குடிப்பதும்...ஒரே சிகரட் புகைக்குள் நின்று கொண்டு உடல் நலத்தை கெடுப்பதும்...இது மூடநம்பிக்கை விதி தெரிந்தது...ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வர்....?????! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:?: ஆக விதி தெரிந்து கொண்டும் உல்லாசம் என்ற ஏதோ ஒரு மாய உலகிற்காய் வாழ விளைபவர்கள்...மதச்சடங்குகளுக்குள் இருக்கும் நெறிகள் ஒழுங்குகள் விதிகள் இவை மன ஒடுக்கம் நோக்கி மனிதனை வழிநடத்தும் எளிமையான வாழ்வியல் நடமுறைகள் என்ற சாதாரண உண்மை புரியாதவர்களாக இருக்க முடியுமா...???!.... இல்லை தங்களால் இயலாது என்பதற்காக வெறும் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்களா...????!
இன்றைய இணைய உலகில் பல இந்திய சமயத் தளங்களில் இந்துசமயம் பற்றி ஆங்கிலத்தில் அழகாக எளிமையாக எழுதி இருக்கின்றார்கள்... எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இவற்றைப் பார்வையிட முனைகின்றனர்...தேடப் பரந்த உலகம் இருக்கும் போது ஏன் குப்பைத் தொட்டிக்குள்ளேயே தேட நிற்கிறீர்கள்.....அதுதான் புரியவில்லை....???????!
சிந்திக்க வேண்டியது பெற்றோரும் பெரியவரும் மட்டுமல்ல.... இளைஞர்கள் நாமுமே.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

