06-18-2003, 03:40 PM
பெண்கள் என்பவர்கள் பெரிய கொம்பர்களும் அல்ல அதே போல் ஆண்கள் என்பவரும் பெரிய பிஸ்த்தாக்கள் இல்லை.....சாதாரண மனித சிந்தனை அடிப்படையில் ஒரு மனிதன் தவித்து களைத்து வரும் போது அவனுக்கு உதவியளிப்பது ஆறுதலாக இருப்பது சமூக வாழ்வியல் அம்சம்....அதைவிடுத்து மனிதாபிமானம் அற்ற கருத்துக்களுக்குள் இவ்விவாதம் செல்வதும் ஏட்டிக்கு போட்டியாக சமூகத்துள் முரண்பாடுகளை வளர்ப்பதும் என்ன பயனைத்தரப் போகின்றன! பரணீயை பொறுத்தவரை ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கண்டதை சிலர் ஆணாதிக்க சாயம் பூசி ஈகோ கொண்டு பார்ப்பது மனிதனின் அடிப்படை சமூக வாழ்வியலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போல் தெரிகிறது! இப்படியே பெண் விழிப்புணர்வு சென்றால் பெண்கள் மனைதர்களாகவன்றி அரக்கர்களாக வேறுபட்ட சமூகமாகத்தான் வாழ வேண்டிவரும்!
இவ்வாதம் ஆண் பெண் நிலைகடந்து மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும் அதுதான் பிரச்சனைகள் புரிதுணர்வுகளின் அடிப்படையில் தீர வழி சமைக்கும்!
இவ்வாதம் ஆண் பெண் நிலைகடந்து மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும் அதுதான் பிரச்சனைகள் புரிதுணர்வுகளின் அடிப்படையில் தீர வழி சமைக்கும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

