07-21-2004, 09:23 PM
இடுகாடு ஒன்றில் ஒரு சடலம் புதைக்க வந்திருந்தது. இறந்த நபரின் மனைவியும் வந்திருந்தாள் அவள் தனது கணவரது உடலுக்கு வெள்ளை ஆடை உடுத்திருப்பதைக்கண்டு கோபங்கொண்டு அங்கு அதை நடத்திக்கொடுத்தவரை கடிந்துகொண்டாள். நேரம் போதாது என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் தனது கணவன் போட்டிருக்கும் ஆடை வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாது என்று கூறிவிட்டாள். வேறுவழியின்றி அடங்கம் செய்யும் தொழிலாளர்கள் சடலந்தை தனியே எடுத்துச்சென்று உடையை மாற்றி வேகமாக வந்துவிட்டனர். இறந்தவரின் மனைவியின் விருப்பம் போலே இனிதாக நல்லஅடக்கம் நடைபெற்றது. எல்லாம் முடிந்து போகும் முன் அவள் நல்லடக்கத்தை நடத்திக்கொடுக்கும் ஏற்பாட்டாளரை எப்படி வேகமாக ஆடையை மாற்றினீர்கள் என்று வினவினாள். அதற்கு அவர்கள் அது மிக மிக இலகுவானது. ஏற்கனவே கறுப்பு ஆடை அணிந்த ஒரு பிணம் காத்திருந்தது எமது அலுவலகத்தில். அதை எடுத்துவந்து விட்டோம் என்றாhகள். அதற்கு அப்பெண் என் கணவனின் முகத்தைப்பார்த்தேனே என்றாள். அதற்கு அவர்கள் உண்மைதான் தலை மட்டும் உங்கள் கணவரது என்றார்கள்


