07-21-2004, 03:40 PM
சமாதான முயற்சிகளை ஜேர்மனி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது
இலங்கையின் சமாதான முயற்சிகளை ஜேர்மனி மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஜொஸ்கா பிஸ்கர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர், நேற்று முன்தினம் சிறிலங்கா ஐனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைக் கூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஐனாதிபதி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் தயாரித்;;;து முடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் பதிலுக்காகவே தாம் காத்திருப்பதாகவும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஜொஸ்கா பிஸ்கர், இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களை ஜேர்மனி மிகுந்த அக்கறையுடன் அவதானித்து வருவதாகவும், இதன்படி இலங்கையில் மேலதிக முதலீடுகளை ஜேர்மன மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>