07-21-2004, 03:33 PM
ஜயந்த தனபாலவும் புலித்தேவனும் கொழும்பில் சந்திப்பு
சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் ஜெயந்த தனபாலவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவனும் சந்தித்து, தற்போதைய சமாதான முயற்சிகள் குறித்து உரையாடியுள்ளனர்.
பேச்சுவார்த்தை முறிந்துபோன பின்னர், உயர்மட்டத்தில் நடைபெற்றுள்ள இரு பகுதிக்குமிடையிலான இச்சந்திப்பிற்கு பலதரப்பு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், இது ஒரு பரஸ்பர சந்திப்பு மட்டுமே என்று ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.
வருகிற வார இறுதியில் கொழும்பிற்கு வருகை தரவுள்ள நோர்வே தரப்பினர், கிளிநொச்சி சென்று முக்கிய பேச்சுக்களை நடாத்தவுள்ளதுடன், அடுத்தகட்டப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து முக்கிய விபரங்களை வெளியிடவுள்ளார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், தனபால-புலித்தேவன் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எப்படியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதன் மூலம், தடைப்பட்டுள்ள சர்வதேச நிதியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி சந்திரிகா, இம்முறை நோர்வே தூதுவர்களுடாக பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படுவதை உறுதி செய்வார் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
----------------------------
கிளிநொச்சியில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர்!
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புறு ஹொவ்டே இன்று பிற்பகல் 2:30 மணியளவில் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானு}ர்தி மூலம் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்தில் சென்று இறங்கியுள்ளார்.
இவர் நாளை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
இதனிடையில், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் மாவட்ட பிரதிநிதிகளுக்கும், கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் செயற்படும் மாவட்டங்களில் போர் நிறுத்த உடன்படிக்கையை மேலும் பலப்படுத்தி, யுத்த நிறுத்த மீறல்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் குழுதலைவர் ட்ரொன் புறு ஹொவ்டே, பிரதித் தலைவர் ஹக்ரப் ஹொக்லன்ட் மற்றும் வடக்கு, கிழக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, வன்னி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அனைத்திலும் பணியாற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் நிலைமைகளால் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதில் கண்காணிப்புக் குழுவினர் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இதனால், அவர்கள் தங்கள் பணிகள் குறித்து மீள்பரிசீலணை செய்யும் நிலையில் இருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை கண்காணிப்புக் குழுவின் குரல்தரவல்ல அதிகாரி லீசா பொன்னபேர்க் மறுத்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>