07-21-2004, 03:30 PM
ஜேர்மன் எம்.பி.க்கள் முன்னிலையில் யாழ். எம்.பி.க்கள் இருவர் மோதல்
இலங்கை வந்துள்ள ஜேர்மனி எம்.பி.க்கள் ஐந்து பேர் நேற்று முன்தினம் காலை பாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்களை சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பு சபாநாயகரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும், யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜாவிற்குமிடையில் பலத்த கருத்து மோதல் ஏற்பட்டது. இரு தமிழ் அரசியல்வாதிகளும் ஆங்கில மொழியில் நடத்திய கருத்து மோதலை ஜேர்மன் எம்.பி. க்கள் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள். அவர்களின் சார்பாகவே தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது என யாழ். மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா கூறினார்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நீதி நியாயமான தேர்தல் நடைபெறவில்லை. இதனைத் தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய யூனியன் அறிக்கை உட்பட அனைத்து அறிக்கைகளும் உறுதி செய்துள்ளன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதனால் இருவருக்கிடையிலும் பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>