07-21-2004, 03:26 PM
தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான வானொலியின் ஒலிபரப்பு நிறுத்தம்!
இலங்கை ஒலிரபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பாகும் இலண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒரு மணிநேர நிகழ்ச்சி, கடந்த நான்கு தினங்களாக ஒலிபரப்பாகவில்லை என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த இணைப்பு மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஆங்கில இணையத்தளத்தினர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவை தொடர்புகொண்டு இதுபற்றி வினவியபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த இணைப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனை தீர்ப்பதற்கு இன்னும் ஒருவார காலம் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது.
இலண்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஷமத்தனமான பிரச்சாரம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கடும் ஆட்சேபத்தை இலங்கை அரசிற்கு அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>