07-20-2004, 10:12 PM
சிறுவன் ஒருவன் ஒரு பல்பொருள் அங்காடியி;ல் ஒரு பெரிய சோப் பவுடர் பக்கெட்டை எடுத்து காசாளரிடம் பணஞ்செலுத்தினான். மேற்பார்வை செய்து கொண்டிருந்த கடைக்காரர் வீட்டில் துவைப்பதற்கு நிறைய ஆடைகள் உள்ளனவா? என்று வினவினார். சிறுவன் இல்லை எனது நாயை குளிப்பாட்ட எடுத்துச்செல்கிறேன் என்றாhன். கடைக்காரர் அவனிடம் "வேண்டாம். நாயைக்குளிப்பாட்ட இது உகந்ததல்ல. நாய் நோய்வாய்பட வாய்புண்டு ஏன் இறந்தும் போகலாம்" என்று எச்சரித்தார். சிறுவன் எதையும் பொருட்படுத்தாது வாங்கிச்சென்றுவிட்டான். ஒரு வாரம் கழித்து அவன் மீண்டும் வந்தான். கடைக்காரர் நாய்க்கு ஒன்றும் ஆகவில்லையே என்று வினவினார். அவன் கவலையாக "நாய் இறந்து போய்விட்டது" என்றான். தனது வருத்தத்தை தெரிவித்த கடைக்காரர் "அன்றே உன்னை நான் தடுத்தேன். அந்த சோப் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என்று நீ தான் கேட்கவில்லை" என்றார். அதற்குச்சிறுவன் அடடா சோப்பவுடரால் அது இறந்ததா நான் வாசிங்மெஸின் தான் காரணம் என நினைத்திருந்தேன் "என்றான்.


