07-20-2004, 09:52 PM
பாலர் பாடசாலையில் இருந்து சிறார்களை, காவல்நிலையத்தின் செய்ற்பாட்டை விளக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு தேடப்படும் திருடர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. ஒரு சிறுவன் அருகில் இருந்த ஒரு பொலிஸ்காரரைப்பார்த்து எதற்காக புகைப்படங்களை ஒட்டியிருக்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர் புலனாய்வுப்பிரிவினரால் தேடப்படும்குற்றவாளிகள் இவர்கள் என்று கூறினார். கொஞ்சம் யோசனை செய்த சிறுவன் "சரியான முட்டாள்கள் உங்கள் புலனாய்வுப் பொலிசார். புகைப்படம் எடுத்தபோதே கைது செய்து இருக்கலாமே அவர்களை அப்போது விட்டுவிட்டு இப்போது தேடுகிறார்களே" என்றான்.


