07-15-2003, 09:49 AM
அமெரிக்கான் அரபியர்களின் எண்ணெய் வழங்களைச் சூறையாட சதாமை ஒரு துருப்புச் சீட்டாகப் பாவித்து, சிங்கள அம்மணியின் “சமாதானத்திற்கான யுத்தம்” என்ற முட்டாள்தனமான கொள்கையைப் போல் “பயங்கர ஆயதக்களைவு” என்ற பதத்துடன் நுழைந்து ஈராக்கில் தனது சுயலாபங்களுக்காக ஒரு பொம்மை தலையாட்டி ஆட்சியை உருவாக்க முயன்று இன்று அத்தனை அரபிய நாடுகளின் ஆத்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அடிக்கு மேல் அடிவாங்கிக் கொண்டும், தனது இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக தனது குட்டு பெளிப்படத்தப்பட்டு கோழி திருடிய கள்வன் போல் முழிபிதுங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளையில் ஆபிரிக்கநாட்டு விஜயம,; ஏன்? அங்கே நெல்சன் மண்டேலாவும், கேணல் கடாபியும் ஆபிரிக்க நாடுகளை ஒன்று சேர்க்க முயன்று கொண்டிருப்பது பிடிக்காமல் அதையும் குழப்பியடிக்கத் தான் அங்கே விசிட். அல்லாமல் அங்கே பிரிந்து நிற்பவர்களைச் சேர்த்து விடவோ அல்லது பட்டினிச் சாவினில் அழிந்து கொண்டிருப்வர்களைக் காக்கவோ அல்ல. மேற்கத்தைய நாடுகளின் ஒரு வித மனப் பயம், கீழைத்தேய நாடுகளின் ஒற்றுமை, அமைதி தமது பொருளாதார, ஆயுத பலங்களைக் குறைத்து விடும் அழித்து விடும், அத்துடன் அவர்கள் தம்மை மிஞ்சிவிடுவார்கள் என்ற மனக் கிலேசம். இதுவே அமெரிக்க மேற்கத்தைய நாடுகளின் பிரத்தாளும் சூழ்ச்சியின் சூத்திரம். அதைத் தான் அன்றிலிருந்தே மேற்கத்தைய தேசம் செய்து கொண்டிருக்கும் துரோகம். அதன் ஒரு பகுதி தான் ஆபிரிக்க பயணம். ஒன்று கையைவிட்டுப் போய்விட்டால் இன்னோன்றையாவது பிடிப்போம் என்ற அவதி.
இவ் வருடத்தைய உலக மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையி கூறியிருப்பது என்ன? அமெரிக்கனின் பயங்கரவாத ஒழிப்புக் கொள்கையினால் உலகில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்துள்ளது என்று. அமெரிக்கன் தனது முட்டாள்தனமான கொள்கைகளினால் உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல உலகின் அமைதியையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றான். பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில், தன்னை எதிர்பபவரை அழித்து உலகை ஏமாற்றி அப்பாவிகளைப் பயங்கர வாதிகள் ஆக்கவே அமெரிக்கா முயல்கின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan