07-20-2004, 05:25 PM
83 ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 72.3 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்க ஜனாhதிபதி தீர்மானம்!
1983ஆம் அண்டு ஜூலைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடாக 72.3 மில்லியன் ரூபாவை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் இந்த நட்டஈட்டுத் தொகை செலுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு முதல் 84ஆம் ஆண்டுவரை விசேடமாக 83ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இனக் கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார்.
இந்தக் குழுவினர் நிவாரணம் வழங்குவதற்கு தகுதிவாய்ந்தவை என்று 937 முறைப்பாடுகளை இனம் கண்டுள்ளார்கள்.
இவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் வைபவத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புனர்வாழ்வு புனரமைப்பு இன நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கு நட்ட ஈட்டை வழங்குவார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய என்று அமைக்கப்பட்ட மூவரடங்கிய ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.சர்வானந்தா, ஜனாதிபதி சட்டத்தரணிகளான எஸ்.எஸ்.சகபந்து, எம்.என்.சுஹைர் ஆகியோர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com
-------------------------
ஏன் பிறந்தது இந்த ஞானம் இப்போ...????!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>