07-20-2004, 02:10 PM
Quote:ஆனால் எனது நண்பரின் பெயரில் ( அவரும் யாழ் கள உறுப்பினர் தான்) நுழைந்த போது மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த நிறங்களில் தானே தென்பட்டார்கள். அதெப்படி?
ம்... நீங்கள் குறிப்பிட்ட பின்னர் தான் நானும் தேடிப்பார்த்தேன். உங்களுடைய Boardstyle என்பதை FI Subsilver shadow என்பதற்கு மாற்றினால், நீங்கள் விரும்பியது போல பச்சை செம்மஞ்சல் ஆகிய நிறங்களில் நிர்வாகி, மட்டுறுத்துனர் ஆகியவர்களின் பெயர்கள் காண்பிக்கப்படும்.
கருத்துக்களத்தின் மேற்பகுதியில் பார்த்தீர்கள் என்றால் Profile என்று ஆங்கிலத்தில் அல்லது "சுயகுறிப்புகள்" என்று தமிழில் ஒன்று இருக்கும். அதனை அழுத்துவதன் மூலம் உங்களுடைய தரவுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
Boardstyle இனை எப்படி மாற்றுவது என்பது பற்றிய விளக்கத்தினை "கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழிமுறைகள்" என்ற தலைப்பில் வலைஞன் எழுதியுள்ளார். http://www.yarl.com/forum/viewtopic.php?t=20
FI Subsilver shadow என்னும் இந்த Boardstyle இல் மட்டுந்தான் நீங்கள் விரும்பிய அந்த செயற்பாடு உள்ளது. மற்றவற்றில் இந்த செயற்பாடு இணைக்கப்படவில்லை.

