07-20-2004, 01:48 PM
Quote:<b>நான் இரு மின்னஞ்சல் முகவரிகள் வைத்திருக்கிறேன். அதில் இந்த முகவரிக்கு (example@yarlmail.com) வரும் மின்னஞ்சல்கள் யாவும் எனது சகோதரனுக்கு போகின்றது. அவரது முகவரிக்கு. ஆனால் இந்த முகவரியில் msn mesenger உண்டு. </b>
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்கள் உங்களுடைய
சகோதரனுக்கு போவதற்கு இரண்டு விதமான செயற்பாடுகள் கையாளப்படலாம்:
1. உங்கள் சகோதரரிடம் உள்ள மின்னஞ்சல் சேவையில், உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பயனாளர் பெயரையும், மறைவுச் சொல்லையும் கொடுத்து அங்கு வரும் மின்னஞ்சல்களைத் தானாகவே தனது முகவரிக்குக் கொண்டுவருமாறு செய்திருக்கலாம். (அதாவது உங்கள் சகோதரர் தன் வீட்டுப் பணியாளரிடம் உங்கள் அஞ்சல்பெட்டியின் திறப்பைக் கொடுத்து அதனுள் உள்ள கடிதங்களை எடுத்துவருமாறு சொல்வது)
-->இதற்கு POP3 எனப்படும் மின்னஞ்சல் சேவை வழங்கியின்(server) முகவரி தேவை. (pop.yarlmail.com). அத்துடன் username, password தேவை.
2. உங்கள் மின்னஞ்சல் சேவையில், உங்கள் சகோதரரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அங்கு கொண்டுபோய்ச் சேர்ப்பிக்குமாறு செய்திருக்கலாம். (அதாவது உங்கள் வீட்டுப் பணியாளரிடம், உங்கள் சகோதரரின் வீட்டு முகவரியை மட்டும் கொடுத்து,
உங்களுக்கு வரும் கடிதங்களைக் கொடுத்தனுப்புதல்)
-->இதற்கு மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும்.

