Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
#4
[size=18]<b>ஆசியக் கோப்பை : ராகுல் சதம்! இந்தியா வெற்றி!!</b>



ராகுல் திராவிட் 90 பந்துகளில் அடித்த அபார சதமும், கங்குலியின் அரை சதமும், இர்ஃபான் பத்தான், லக்ஷ்மிபதி பாலாஜி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் அருமையான பந்து வீச்சும் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தன!

ரங்கிரி டம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த பி பிரிவு போட்டியில் முதல்முறையாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐக்கிய அரபு குடியரசுகள் அணியை 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி சுலபமாக வென்றது.

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஐக்கிய அரபு அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அலி அப்பாஸும், அசிம் சையதும் வீசிய பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் சவாலை சந்தித்தது.

முதல் ஓவரிலேயே அவசரமாக ரன் எடுக்க முயன்ற வீரேந்திர ஷேவக் ரன் அவுட்டாகி வெளியேறினார். 8வது ஓவரிலேயே 18 ரன்களை எடுத்த சச்சின் (18) ஆட்டமிழந்தார். முதல் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 58 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 17வது ஓவரில் லக்ஷ்மணையும் (14) இழந்தது.

அதன் பிறகு இணை சேர்ந்த திராவிடும், சௌரவும் மிக நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். ராகுல் திராவிட் ஒவ்வொரு பந்திலும் 1 ரன்னாக எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் இருவரும் இணைந்து 4வது விக்கெட்டிற்கு 88 ரன்கள் அணியை நிலைப்படுத்த உதவியது.

அரை சதத்தைக் கடந்த சௌரவ் கங்குலி, ரன் எண்ணிக்கையை வேகப்படுத்த முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் அதன் பிறகு ஆட வந்த யுவராஜூம் (22), மொஹம்மது கய்ஃபும் (32) ராகுலுடன் இணைந்து மிக வேகமாக ரன்களை எடுத்து அணியின் எண்ணிக்கையை 260 ரன்களுக்கு உயர்த்தினர்.

ராகுல் திராவிட் 90 பந்துகளில் சதம் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களத்தில் நேரம் ஆக ஆக பந்தின் வேகம் குறைந்தபொழுதும் சூழ்நிலைக்கு தக்கவாறு மிகச் சிறப்பாக ஆடி ரன்களை எடுத்தது மட்டுமின்றி, குறைந்த பந்துகளில் சதமும் அடித்து அணியை கரையேற்றினார் திராவிட்.

பத்தான், பாலாஜி அபார பந்து வீச்சு!

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அணி, முதல் ஓவரிலேயே பத்தானின் பந்திற்கு முதல் விக்கெட்டை இழந்தது. அந்த அணி 8வது ஓவரை எட்டுவதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

பத்தான் அபாரமாக பந்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஐக்கிய அரபு அணியின் தாகீர், ஜாஹீர் கானின் தாக்குதலை மிகத் திறமையாக சமாளித்து அரை சதத்தை எடுத்து அந்த அணியின் எண்ணிக்கையை 100 ரன்களை தாண்டச் செய்தார். சச்சினின் பந்தை மேலேறி வந்து தூக்கியடிக்க முயன்று தாகீர் ஆட்டமிழந்ததுடன் அந்த அணியின் சவாலும் முடிவுற்றது.

35 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஐக்கிய அரபு அணி ஆட்டமிழந்தது. இந்தியா 116 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இர்ஃபான் பத்தான் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பாலாஜி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், சச்சின் கடைசிக் கட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் போனஸ் புள்ளியையும் பெற்றது இந்திய அணி.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-20-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:20 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:27 AM
[No subject] - by ÀÃ狀¡¾¢ - 07-20-2004, 07:39 AM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:30 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:35 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:36 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 02:42 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:52 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:59 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 03:03 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-23-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:22 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:28 PM
[No subject] - by kavithan - 07-26-2004, 05:03 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:28 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:33 AM
[No subject] - by tamilini - 07-28-2004, 12:01 PM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:12 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 08:09 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 09:08 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 09:31 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:32 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 10:39 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:53 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:47 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:30 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:33 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 07:27 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-02-2004, 09:39 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:41 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:42 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 09:14 AM
[No subject] - by kavithan - 08-25-2004, 03:16 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 07:45 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 08:04 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:25 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:40 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 05:14 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:29 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 09:41 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 11:03 AM
[No subject] - by பரஞ்சோதி - 09-01-2004, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)