07-20-2004, 05:20 AM
[size=18]<b>இலங்கையிடம் போராடித் தோற்றது இந்தியா!</b>
திங்கள், 19 ஜூலை 2004
இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டமும், நூவான் சொய்சாவின் அபார பந்து வீச்சும், ராகுல் திராவிட்-யுவராஜ் சிங் இணையின் அபார ஆட்டத்தையும் தாண்டி இலங்கை அணிக்கு வெற்றித் தேடித் தந்தன!
இந்தியன் ஆயில் ஆசியக் கோப்பைக்காக ரங்கிரி டம்புல்லா சர்வதேச மைதானத்தில் இன்று நடந்த 6வது பரபரப்பான போட்டியில், இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 282 ரன்களை எடுத்தது. 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் 15 ஓவர்களிலேயே 70 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் பிறகு திராவிடும், யுவராஜூம் இணைந்து எடுத்த 134 ரன்களின் உதவியால் இலக்கை நெருங்கியும் வெற்றியை எட்ட முடியாமல் 269 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
முதல் 20 ஓவர்களில் இந்திய அணியின் அபார பந்து வீச்சை மிக எச்சரிக்கையாக எதிர்கொண்ட இலங்கை அணி, ஒரு விக்கெட்டை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதற்குப் பிறகும் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடி குணவர்தனேயும், அட்டப்பட்டுவும் அந்த அணியின் எண்ணிக்கையை 34வது ஓவரில் தான் 150 ரன்களை எட்டச் செய்தனர். அட்டப்பட்டு 50 ரன்களும், அவிஷ்கார் குணவர்தனே 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்திருந்த நிலையில் இணைந்த குமார சங்ககாராவும், மஹிலா ஜெயவர்தனேயும் மிகச் சிறப்பாக ஆடி 93 பந்துகளில் 116 ரன்களைக் குவித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் 282 ரன்களை இலங்கை அணி குவித்தது.
இந்திய அணியின் துவக்க பந்து வீச்சாளர்களைப் போலவே இலங்கை அணியின் சமிந்தா வாசும், நூவான் சொய்சாவும் மிகச் சிறப்பாக பந்து வீசினர். சொய்சா, சச்சின், பட்டேல், கங்குலி ஆகியோரை வீழ்த்தினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சேவக்கை (37) அருமையான பந்து ஒன்றை வீசி ஃபர்வீஸ் மஹாரூஃப் ஆட்டமிழக்கச் செய்தார்.
15வது ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்திய அணியை, திராவிடும், யுவராஜூம் இணைந்து தூக்கி நிறுத்தினர். இவர்கள் இருவரும் இன்று ஆடிய ஆட்டம் அபாரமானது என்கின்ற வார்த்தைக்கு உதாரணமாகும். கடினமான ஒரு சூழ்நிலையில் பந்துக்கு பந்து ரன் எடுத்து இவர்கள் இருவரும் அடுத்த 26 ஓவர்களில் இணைந்து எடுத்த 134 ரன்களின் உதவியால் இந்திய அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது.
யுவராஜ் 78 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது வாசின் பந்தை தூக்கியடிக்க முயன்று ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆட வந்த கய்ஃபுடன் இணைந்து மேலும் 30 ரன்கள் குவித்த ராகுல் திராவிட், முரளிதரனின் பந்தை சரியாகக் கணிக்காமல் பின்னால் சென்று தடுத்தாட முயன்று 82 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
கய்ஃப் வேகமாக ஆடி 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதிக் கட்டத்தில் பத்தானும், பாலாஜியும் தங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக ஆடினர். ஆயினும் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.
பி-பிரிவில் 11 புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்திலும், 7 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.
வரும் புதன்கிழமை கொழும்புவில் நடைபெற உள்ள போட்டியில் ஏ-பிரிவில் 2வதாக வந்துள்ள வங்கதேச அணியுடன் இந்தியாவும், முதலிடத்தில் வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் இலங்கையும் மோதுகின்றன.
நன்றி வெப் உலகம்

[b][size=18]