Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
#1
<img src='http://www.webulagam.com/cricket/images/top-cricket.gif' border='0' alt='user posted image'>

கிரிக்கெட்: இந்தியா இலங்கையிடம் தோல்வி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வி.வி.எஸ். லட்சுமணுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக ஜெயந்தாவும், குணவர்த்தனேயும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவர் தொடங்கியபோது ஆட்டம் மழையால் சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் இலங்கை அணியினர் இந்திய அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள மிகவும் தடுமாறினர். ரன்வேகம் மிகவும் மெதுவாக இருந்தது.

ஸ்கோர் 63 ஆக இருந்தபோது 34 ரன் எடுத்திருந்த ஜெயந்தா பாலாஜி பந்தில் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் அட்டபட்டு ஆட வந்தார். இந்த ஜோடி 20.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100யைக் கடக்க உதவியது. ஸ்கோர் 128 ஆக இருந்தபோது குணவர்த்தனே (49 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த வந்த சங்கக்கரா அடித்து ஆட ஆரம்பித்தார்.


மறுமுனையில் 50 ரன்களை எடுத்திருந்த அட்டபட்டு ரன் அவுட் ஆனார். பின்னர் சங்கக்கராவுடன் ஜெயவர்த்தனே இணைந்து அதிரடி ஆட ஆரம்பித்தார். சங்கக்கரா 57 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.

283 ரன்கள் இலக்குடன் தொடக்கவீரர்களாக டெண்டுல்கரும், பார்த்தீவ் பட்டேலும் களம் இறங்கினர். 4 ஓவரில் 11 ரன் எடுத்து இருந்த டெண்டுல்கர் ஜோய்சா பந்தில் அவுட் ஆனார்.

அப்போது அணியன் ஸ்கோர் 16. பின்னர் வந்த ஷேவாக் அடித்து ஆட ஆரம்பித்தார். அதிர்ஷ்டவசமாக இவர் கொடுத்த கேட்ச்சை சமிந்தா வாஸ் தவறவிட்டுவிட, ஷேவாக் ரன்களை வேகமாக சேகரிக்கத் தொடங்கினார்.

மறுமுனையில் 6 ரன் எடுத்து இருந்த பார்த்தீவ் பட்டேல் ஜோய்சா பந்தில் கேட்ச் அவுட் ஆனார். இதனையடுத்து கங்குலி ஷேவாக்குடன் இணைந்தார். 13.4 ஓவரில் ஷேவாக் இரண்டு ரன்களை எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கங்குலியும் அவுட் ஆனார்.

4 முக்கிய விக்கெட்டுகளை 71ரன்களில் இழந்த அணியை டிராவிட், யுவராஜ் ஜோடி சரிவில் இருந்த மீட்டது. டிராவிட் 73 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். இந்தியா 40.1 ஓவரில் 200 ரன்களை எடுத்தது. அப்போது 47 ரன்களை எடுத்திருந்த யுவராஜ் சிங் வாஸ் பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.

பின்னர் வந்த கயூப் 22 ரன்களிலும் டிராவிட் 82 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இறுதியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது. பாகிஸ்தான் வீரர்கள் சோயப் மாலிக், யூனுஸ்கான் ஆகியோர் சதம் அடித்தனர்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கிரிக்கெட் - ஆசியக் கோ - by kuruvikal - 07-20-2004, 12:37 AM
[No subject] - by kuruvikal - 07-20-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:20 AM
[No subject] - by kavithan - 07-20-2004, 05:27 AM
[No subject] - by ÀÃ狀¡¾¢ - 07-20-2004, 07:39 AM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:30 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:35 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:36 PM
[No subject] - by kuruvikal - 07-23-2004, 02:42 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:52 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 02:59 PM
[No subject] - by kavithan - 07-23-2004, 03:03 PM
[No subject] - by பரஞ்சோதி - 07-23-2004, 09:02 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:22 PM
[No subject] - by kavithan - 07-24-2004, 09:28 PM
[No subject] - by kavithan - 07-26-2004, 05:03 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:28 AM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:33 AM
[No subject] - by tamilini - 07-28-2004, 12:01 PM
[No subject] - by kuruvikal - 07-28-2004, 03:12 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 08:09 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 08:16 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 09:08 PM
[No subject] - by kavithan - 08-01-2004, 09:31 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:32 PM
[No subject] - by tamilini - 08-01-2004, 10:39 PM
[No subject] - by kuruvikal - 08-01-2004, 10:53 PM
[No subject] - by kavithan - 08-02-2004, 12:47 AM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:27 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 12:30 PM
[No subject] - by tamilini - 08-02-2004, 12:33 PM
[No subject] - by kuruvikal - 08-02-2004, 07:27 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-02-2004, 09:39 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:41 PM
[No subject] - by kavithan - 08-23-2004, 11:42 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 09:14 AM
[No subject] - by kavithan - 08-25-2004, 03:16 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 07:45 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 08:04 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:25 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 03:40 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 05:14 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:28 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 07:29 PM
[No subject] - by பரஞ்சோதி - 08-28-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 08-28-2004, 09:41 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 11:03 AM
[No subject] - by பரஞ்சோதி - 09-01-2004, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)