07-18-2004, 08:21 PM
Kanani Wrote:சிறிலங்காவிற்கு இந்தியா 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்
[ ராகினி ] [ ஞாயிற்றுக்கிழமை, 18 யுூலை 2004, 14:23 ஈழம் ]
சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது.
சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கடன் உதவி மூலம், சிறிலங்கா அரசு இந்தியாவின் இருந்து எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.
குறைந்த வட்டி வீதத்தில் ஏழு வருட காலத்தில் மீள அளிப்பதற்கு ஏதுவாகவே இந்த கடன் உதவி இந்திய அரசினால் வழஙக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்
இந்த நேரத்தில் கடன் வழங்குவது.....இந்தியாவின் நோக்கத்தை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது...
என்னத்தைக் காட்டுது தெட்டத்தெளிவா... உதை விபரமாச் சொன்னாத்தான் சில பேருக்குப் புரியும்... இல்ல இந்தியா அன்பில இறைக்கிறமாதிரி எல்லே கதையால காட்டிப்போடுவினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

