07-18-2004, 03:22 AM
அனைவருக்கும் வணக்கம்!
நான் கூற நினைத்தவற்றில் பலவற்றை ஈழவன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அதனால் அவற்றை விட்டுவிட்டு விடயத்துக்கு வருகிறேன். நான் கடந்த காலங்களில் கருத்து எழுதாதுவிட்டிருந்தாலும் களத்தை அதிகமாக பார்த்து வந்த பார்வையாளன் என்ற வகையிலும் களத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன் என்ற வகையிலும் என் கருத்தக்களை முன் வைக்க நினைக்கின்றேன்.
வந்ததுக்கு ஏதாவது கூறவேண்டும் என்பதற்காகவோ? குறை கூறவேண்டும் என்பதற்காகவோ இத் தலைப்பை நான் தொடுக்கவில்லை. இது போன்ற விடயங்களால்த்தான் நான் இதுவரைகாலமும் கருத்தெழுத வராமல் விட்டிருந்தேன்.
இன்று மட்டுறுத்துனர்களால் இக் களத்தில் நீக்கப்பட்டுள்ளது என சிவப்பு நிற எழுத்தால் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்ட விடயங்கள் எல்லாம் உண்மையிலேயே தேவையான அல்லது தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்கள்தானா? இளங்கோ பதில்தேவை?
இவற்றில் சில கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மட்டுறுத்துனர்களால் கவனிக்கப்படாமல் அல்லது அவர்களின் நேரமின்மையால் நீக்கப்படாது விடப்பட்டிருந்தது. (அவற்றை கருத்தெனக் கூறமுடியாது) அப்படிப்பட்ட அசிங்கங்கள் பலவற்றை பார்க்கும் துன்பியல் நிலை எனக்குக் கிட்டியது. என் நண்பர்கள் பலருக்கு யாழ் கருத்துக்களத்தை அறிமுகஞ் செய்து வைத்து கருத்துக்களை எழுதத் து}ண்டியிருக்கிறேன். அவர்களில் பலர் இப்படியான விடயங்களைப் பார்த்துவிட்டு து}ஷணம் பழகவா இந்தக் களத்தின் முகவரி தந்தாய் என என்னைக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரங்களின் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு. இவை பின்னர் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நீக்கப்படும் வரை நு}ற்றுகணக்கான பார்வையாளர் அவற்றைப் பார்த்துத்தானிருக்கிறார்கள். இது போன்ற விடயங்களை எழுதுபவர்கள் நிச்சயமாக பிழையானவை என்பதை அறிந்துதானிருப்பார்கள். ஏனெனின் எவரும சிந்தனா சக்தி இயங்காமல் இங்கு எழுத வரவில்லை.
இவர் இப்படி எழுதினார் என அந்த ஒரு சிலரின் பெயர்களை நான் குறிப்பிட்டிருந்தால் இந்தத் தலைப்புக் கூட இப்பொழுது தலைப்புக்கு பொருத்தமில்லாத அசிங்கங்களைத் தாங்கியிருக்கும் என்பதில் எவருக்கும் மறுப்புக் கருத்த இருக்காது என எண்ணுகின்றேன்.
இளங்கோ கூறியிருந்தீர்கள் மற்றவர்களின் கருத்தை மலசலகூடத்தோடு ஒப்பிட்டது தவறென்று. உண்மைதான் நான் இங்கே குறிப்பிட்டவற்றை கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மலசலகூடத்தை விட இழிவான சொல் எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அதைத்தான் நிச்சயமாக எழுதியிருப்பேன்.(களத்தின் நாகரீகம் கருதி விட்டுவிட்டேன்.)
நாம் முன் வைக்கும் கருத்துக்கள் ஆக்கப10ர்வமானவையாகவும் அறிவை வளர்ப்பவையாகவும் இருத்தல் வேண்டும். இதுதான் என் ஆவல்.