Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்கே எனக்காக.......!
#2
tamilini Wrote:<i><b>எனக்கே எனக்காக.......!</b></i>

எனக்காக உயிர் வாழ
என் உள்ளம் தனையாள
எனக்கே எனக்காக
ஓரு உறவுக்காய்...

சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்....

என்னை மட்டும் பார்த்திருக்க
என்னுடன் மட்டும் பேசிக் கொள்ள
எனக்கு ஒரு உலகாக
ஒரு உறவுக்காய்....

கண்கள் மட்டும் பேசிக்க
பொடிநடையாய் உலகை சுற்றி வர
என்னுடன் கூட வர
ஒரு உறவுக்காய்...

நாட்கள் முடியாமல்...
வயதுகள் கூடாமல்...
பல காலங்கள் என்னுடன் வாழ
ஒரு உறவுக்காய்.....

வாழ்த்திட வார்த்தை இன்றி
அனைவரும் பார்த்திருக்க...
உரிமையாய் நான் கை பிடிக்க...
ஒரு உறவுக்காய்...

அன்பால் எனையாள
அவளுக்காய் நான் வாழ
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்
காத்திருக்கிறேன்...
இனியவளின் வரவுக்காய்.....!

கற்பனை மட்டுமே.....!

www.tamilini.blogspot.com


கற்பனை நன்றாக இருக்கிறது... காணப்பட்ட எழுத்துப் பிழைகள் இயன்றவரை திருத்த முயற்சிக்கப்பட்டுள்ளது....!

கவிதையில் சில பொருள் மயக்கம் தரவல்ல வசனங்கள் இருப்பது போல்
எமக்குத் தோன்றுகிறது.... உதாரணத்துக்கு இது ஒரு ஆணின் போலித்தனமற்ற எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

"சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்...."

எங்கோ சில ஆண்கள் தான் தன்னவளுக்காய் மனதுருகி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டிருக்கின்றோம்...நிஜ வாழ்வில்.... மற்றும்படி பெரும்பான்மையான ஆண்கள் மனதோடு அழுவதோடு சரி.... கண்ணீர் காண்பிக்க மாட்டார்கள்... பெண்கள்... மறுதலை... அவர்களுக்கு மனதோடு அழும் அளவிற்கு ஆணின் மீது அன்பு ஒன்றும் வருவதில்லை... அதனால் கண்ணீரோடு வெளிவேசத்துக்கு அழுதுவிட்டுப் போய்விடுவார்கள்... ஆக மனதோடு அழும் ஆணை எப்படி ஒரு பெண் அடையாளம் கண்டு அரவணைக்க முடியும்....?????!எனவே இது உண்மையாக ஒரு ஆணின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Re: எனக்கே எனக்காக.......! - by kuruvikal - 07-18-2004, 01:19 AM
[No subject] - by kavithan - 07-18-2004, 01:31 AM
[No subject] - by kuruvikal - 07-18-2004, 03:19 AM
[No subject] - by kavithan - 07-18-2004, 03:27 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 11:58 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:05 PM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:07 PM
[No subject] - by tamilini - 07-18-2004, 12:12 PM
[No subject] - by kavithan - 07-20-2004, 11:48 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 03:20 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)