07-14-2003, 12:37 PM
<b>பாதுகாப்பு அமைச்சில் அண்மைக் காலங்களில் நடைபெறும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கான உயர்மட்ட மாநாடுகளில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். சகல புலனாய்வு பிரிவுகளினதும் தலைவர்கள் பங்கு பற்றும் இம்மாநாடுகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரும், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான மெரில் குணரட்ன தலைமை தாங்குகிறார். இந்த மாநாடொன்றில் கலந்துகொண்ட அமெரிக்கப் புலனாய்வு அதிகாரி கரும்புலிகளின் செயற்பாடுகள் மற்றும், புலிகளின் போர் வியுூகங்கள் என்பன தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மாநாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் தடைவ எனக் கூறப்பட்டுள்ளது</b>.

