06-18-2003, 01:47 PM
முல்லைத்த~Pவுக்கு அப்பால் ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல் கடற்படையினரின் தாக்குதலிலா அல்லது வெடிவிபத்திலா மூழ்கடிக்கப்பட்டது என்பது போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கும் அரசுக்கும் பெரும் புதிராக இருந்து வருகிறது.
இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் குறித்து முற்றிலும் முரண்பாடான இரண்டு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமைச் செயலகம் விடுத்த அறிக்கையில், புலிகளின் கப்பல் தாக்கப்படவில்லை எனவும் எச்சரிக்கை உத்தரவை மீறி முன்னேறிச் சென்ற கப்பல் வெடித்துச் சிதறியது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஜனாதிபதி செயலகம் இச்சம்பவம் குறித்து விடுத்த அறிக்கையில், புலிகளின் கப்பலில் இருக்கும் பொருட்களைச் சோதனையிட அனுமதி கோரிய போது, புலிகளின் கப்பலிலிருந்து பதில் கிடைக்காததால் கடற்படை தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்விரு அறிக்கைகளின் படியும் புலிகளின் கப்பல் மூழ்கிய விதம் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்கும் அரசுக்கும் சரியான த~Pர்மானத்துக்கு வர முடியாதிருப்பதாக சிரே~ட அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இக்கப்பல் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்ட உடனேயே, போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி கண்காணிப்பாளர் ஒருவரையும் அழைத்துச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையின் அதிகாரிகளின் பிரதானிக்கு தான் பணிப்புரை விடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்திருக்கிறார்.
""கடற்படைத் தளபதி நாட்டில் இல்லாததால் அதிகாரிகளின் பிரதானிக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்தேன். ஆயினும், அந்த பணிப்புரையின்படி கண்காணிப்பாளர்கள் புலிகளின் கப்பல் இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை'' எனவும் மாரப்பன கூறியிருக்கிறார்.
இச்சம்பவம் பற்றிய அறிக்கையை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் உதயன்