07-15-2004, 09:43 PM
<b>மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் </b>
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில், கருணா பிரிவைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் எனப்படும் சச்சுமாஸ்டரும், சரவணமுத்து சாந்தகுமார் என்பவரும் உயிரிழந்துள்ளனர். தியாகராஜா முரளிதரன் என்பவர்; காயமடைந்துள்ளார்.
சிறைக்குள் இருந்தவர்களில் கருணா பிரிவைச் சேர்ந்த 25பேரும், விடுதலைப் புலிகளைச் சேர்ந்த 6பேரும் இருந்துள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைத்தும் புவிதரன் என்னும் ஆயுதபாணி சரணடையாமல் சிறைக்கூரைப்பகுதியில் ஏறிநின்று அருகில் வந்தால் சுடுவதாகவும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் 4 மணிநேரம் மிரட்டியுள்ளார். ஐ.சி.ஆர்.சி மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழவினருடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப்பின்பே கூரையிலிருந்து இறங்கிவந்து சரணடைந்துள்ளார். இவரிமிருந்து இரு மைக்ரோ கைத்துப்பாக்கிகளையும் இரு கைக்குண்டுகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவரது தலையனைக்குள் கருணா அணியினர் துரோகிகள் என்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் ஒரு சயனைட் குப்பியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சிறையிலுள்ள கருணா அணியினர் வசம் இருந்த கைத்துப்பாக்கிகள் மற்றும் கைத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி கைது செய்யப்பட்ட சச்சு மாஸ்டர் எனப்படும் கணபதிப்பிள்ளை மகேந்திரன் கருணாவினால் உருவாக்கப்பட இருக்கும் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக மாறன் என்னும் பெயரில் நியமிக்கப்பட்டு சிறைக்குள்ளிருந்து தமிழ் ஊடகங்களுக்கு செய்திகளை அளித்து வந்தார் என தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தன என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.