07-15-2004, 05:36 PM
<b>கோடிக்கணக்கானப் பணத்தை சுருட்டி கருணா மனைவியின் பெயரில் வைப்பு - பல நிறுவனங்கள் இயங்குவதாகவும் செய்திகள் அம்பலம் </b>
[ மட்டக்களப்பு ஈழநாதம் ][ வியாழக்கிழமை, 15 யுூலை 2004, 16:17 ஈழம் ]
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்ட காலத்தில் கோடிக்கணக்கில் பணத்தை சூறையாடி தனது மனைவியின் பெயரில் தனியார் வங்கியில் வைப்பிலிட்டிருப்பதுடன் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களையும் நடத்திவருவது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயங்களை கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. தராகி என்பவரால் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழீழ விடுதலைப்புலிகளால் கடந்த மார்ச் மாதம் வெளியேற்றப்பட்ட பின்பு மகாஜல எனும் பெயரில் ஏற்றுமதி இறக்குமதி தனியார் நிறுவனம் ஒன்றை கருணா பதிவு செய்துள்ளார்.
நிறுவனத்தின் தலைவராக கருணாவின் மனைவி நிரா என்றழைக்கப்படும் திருமதி வித்தியாபதியும், முகாமைத்துவப் பணிப்பாளராக கருணாவின் மனைவியின் தந்தையார் கல்லடியைச் சேர்ந்த கந்தையா சந்திரசேகரன் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாஜல ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் இலக்கம் (P.ஏ.ளு.) பீ.வி.எஸ். 36846 ஆகும். இது நிறுவனங்கள் பதிவாளர் நாயகம் அவர்களால் இந்நிறுவனத்திற்கான உடன்படிக்கை ஆவனங்கள், உப விதிகள் என்பன சட்டத்தரணியும் சத்திய ஆணையாளருமான எஸ். துரைராசா அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிறுவனத்திற்கு வெள்ளவத்தையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் 25 மில்லியன் ரூபா திருமதி கருணாவின் பெயரில் வைப்பிலிடப்பட்டு இதனை ஆதாரமாகக் காட்டி நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாகவும் டெய்லிமிரர் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் இரு நிறுவனங்கள் கருணாவின் பெயரில் பதியப்பட்டுள்ளதான விடயமும் அம்பலத்துக்கு வந்துள்ளன.
மேற்படி இரு நிறுவனங்களுக்கும் கருணாவின் நெருங்கிய சகாவாகவிருந்து செயற்பட்டு வரும் குகனேசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கணக்காளர் கணக்கு பரிசோதகர்களின் கூற்றுப்படி 30 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் உள்ளுர் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் தனவந்தர்களிடமிருந்து குகனேசன் ஊடாக அறவிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெரும் தொகை நிதி பெற்றுள்ளமை தொடர்பான வரவு செலவு ஆவனங்கள் எதுவும் இல்லை என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பொதுமக்களின் பணத்தை சூறையாடி கருணா நிறுவனங்களை உருவாக்கியுள்ள அதேவேளை கருணாவின் வரி வசூலில் மட்டு. அம்பாறை மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள், வர்த்தகர்கள், தனவந்தர்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டெய்லிமிரர் செய்தியில் குறிப்பிடப்பிட்டுள்ளது.
நன்றி புதினம்