07-15-2004, 04:25 PM
சர்தாஐp ஒருவரின் பையன் தினம் பள்ளிக்கு காலம் தாழ்த்தி வந்தான் கோபங்கொண்ட ஆசிரியர் அவனைக் காரணம் கேட்டார் அதற்கு அவன் போக்குவரத்து போலிஸாரின் சட்டத்திற்குட்பட்டுதான் காலம்தாழ்த்தி வருகிறேன் என்றான் திமிராக. போக்குவரத்து போலிஸின் சட்டதிட்டமா? என்று மண்டையை உடைத்துக்கொண்ட ஆசிரியர் மறு நாள் அவனை வீட்டில் இருந்து பின் தொடர்ந்தார். சரியான நேரத்திற்கே அவன் வீட்டைவிட்டு புறப்பட்டான். சராசரி வேகமாகவும் நடந்தான். பள்ளியை நெருங்கியதும் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். கோபங்கொண்ட ஆசிரியர் அவனை இரண்டு அடி போட்டு காரணம் கேட்டார். அதற்கு அவன் அங்கிருந்த போக்குவரத்துப்பொலிஸாரின் அறிவிப்புபலகையைக்காண்பித்தான். அதில் மெதுவாகச்செல்க பள்ளிக்கூடம் அருகில் உள்ளது என்று இருந்தது.


