07-13-2004, 08:50 PM
<b>சத்தியலீலா வெலிக்கடையில் தடுத்து வைப்பு
பாதுகாப்பு, சோதனை கெடுபிடிகள் அதிகரிப்பு </b>
(ஆர்.பிரியதர்ஷினி)
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இளம்பெண் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சத்தியலீலா தற்போது வெலிக்கடை சிறைச் சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வளா கத்தில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை கைதிகளை பார்வையிட வருவோர் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சத்தியலீலா தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், நாளாந்தம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
சி.ஐ.டி.யினர் சத்தியலீலாவிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, ஏனைய பெண் சிறைக் கைதிகளிடமிருந்து இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் இவரைக் கண்காணிக்கவென பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதர சிறைக் கைதிகளோ, பொலிஸ் அதிகாரிகளோ இவருடன் உரையாடக் கூடாது என்று கடுமையான உத்தரவை சி.ஐ.டி.யினர் பிறப்பித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் கேசரிக்குத் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட சந்த்தியலீலாவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: வீரகேசரி