07-13-2004, 08:48 PM
மீண்டும் யுத்தகளத்தை சந்திக்கத் தயார் என புலிகள் அறிவிப்பு
(நமது நிருபர்)
""தமது அமைப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்ட கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமது அமைப்புக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தமுனைவது, பலவந்தமாக தங்கள் மீது யுத்தத்தை திணிப்பதாகவே இருக்கும்'' என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் யுத்த களத்தை சந்திக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கில் தொடரும் வன்முறைகளையடுத்தும்,கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவத்தையடுத்தும், புலிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராய்ட்டர் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் தமது அமைப்பிலிருந்தும் தனிவழி சென்ற கருணாவுக்கு இராணுவமும், அதன் உளவுப்பிரிவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றன.
அதேவேளை மட்டக்களப்பு பிரதேசத்தில் வன்முறைகளும் தூண்டி விடப்படுகின்றன என புலிகள் தெரிவித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அரசியற்துறை பொறுப்பாளர் கௌசல்யன் இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், சமாதான முயற்சியைமுன்நகர்த்திச் செல்வதில் அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. பேச்சுவார்த்தையையும், யுத்தநிறுத்தத்தையும் பயன்படுத்தி எங்கள் மீது பயங்கரவாத யுத்தம் ஒன்றைத் தொடுக்கவே அரசாங்கம் முயல்கின்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவு தலைவர் கௌசல்யன் "தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு எம்மீது வலுக்கட்டாயமாக யுத்தமொன்றை திணித்தால் அதற்கு நாம் முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம் என்றுமவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்புச் செயலாளர் சிறில் ஹேரத், யுத்தநிறுத்த உடன்படிக்கையைக் கடைப்பிடிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உறுதியான பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள இவர் கருணா விடயத்தில் பாதுகாப்புப் படைகளின் தலையீடு இல்லை என மறுத்தலித்துள்ளார்.
வன்செயல் தொடர்பாக எழுத்து மூலமாகவோ, செயற்பாடுகள் மூலமாகவோ செயல்படக்கூடாது என பாதுகாப்புப் படைகளுக்கு பணிப்புரைகள் வழங்கியுள்ளோம் என்றும் சிறில் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசை ஊடாக ரி.பி.சி.ஒலிபரப்புசேவை ஒலிபரப்பப்படுவதற்கும் புலிகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் ஸ்ரீலங்காவின் ஒலிபரப்பு சேவை ஊடாக ஒலிபரப்பப்படும் ரி.பி.சி. ஒலிபரப்பு சேவை தமிழ் மக்களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் விசமப்பிரசாரத்தை மேற்கொண்டுவருவது தற்போதைய போர்நிறுத்தத்தையும் சமாதானச் சூழலையும் பாதிப்படையச் செய்து வருகின்றது என்பதை கவலையுடன் தெரிவிக்கவிரும்புகிறோம்.
தமிழ் தேசவிரோத சக்திகளால் லண்டனில் இருந்து ஒலிபரப்பப்படும் ரி.பி.சி.ஒலிபரப்பினை ஸ்ரீலங்கா அரசு தனது அரச ஊடகமான தென்றல் ஒலிபரப்புஊடாக ஒலிபரப்பு செய்து வருவது தற்போது சமாதானத்தை பாதிக்கும் வகையில் பொய்யான செய்திகளை ஒலிபரப்புவதும் சமாதானத்தை பாதிக்கச்செய்துள்ளது.
09.07.2004 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட கிராமசேவகர் குஞ்சித்தம்பி சிவராசாவை விடுதலைப்புலிகள்தான் சுட்டுக்கொன்றார்கள் என ரி.பி.சி.சேவையூடாக பொய்யான செய்தியினை வெளியிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அண்மைக்கால படுகொலைகளும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களும் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலேயே இடம்பெற்றுவருகின்றன. கிராம சேவகரது படுகொலையும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவமே பொறுப்பேற்க வேண்டும். இதேவேளை உண்மைக்கு புறம்பான செய்திகளை ஒலிபரப்புச் செய்யும் ரி.பி.சி.போன்ற சேவைகளை ஸ்ரீலங்கா அரசு தமது ஊடகங்கள் ஊடாக ஒலிபரப்பு செய்து தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் சம்பவங்களை நிறுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுவதுடன் இது தொடர்பாக ஸ்ரீலங்கா ஊடகத்துறை அமைச்சு கவனத்தில் எடுத்து சமாதானத்தை முன்னெடுப்பதற்கான சூழலை ஏற்படுத்துமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி: வீரகேசரி