07-13-2004, 04:19 PM
அவுஸ்திரேலியாவில் புலிகள் மீதான தடை நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் வைத்திருப்பதற்கு அவுஸ்ரேலியா முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்குச் சார்பான தொழிற் கட்சியி;ன் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோர்ன் மேர்பி நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்;றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்காமைக்கான காரணம் என்ன என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோர்ன் மேர்பி தொடர்ந்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கடந்த பொதுத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>