07-12-2004, 11:37 AM
டக்ளஸ் ஏற்பாட்டில் நேற்று பி.பி.ஸியில் கருணா பேட்டி!
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி பல்வேறு குழப்பங்களையும் சர்ச்சை களையும் உருவாக்கியுள்ள கருணாவின் பேட் டியை பி.பி.ஸி. தமிழோசை நேற்று ஒலிபரப் பியது. கருணாவின் குரல் அது என்பதை சம்பந் தப்பட்ட வட்டாரங்கள் உறுதிசெய்தன. இந்தப் பேட்டியை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஒழுங்கு செய்து தந்தார் என பி.பி.ஸி. தமிழோசை தெரிவித்தது.
டக்ளஸ் தேவானந்தாவால் வழங்கப்பட்ட தாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசி இலக்கம் ஒன்றின் ஊடாகவே தமிழோசை கருணாவுடன் தொடர்புகொண்டது எனத் தெரி கின்றது.
தாம் மட்டக்களப்புப் பிரதேசத்திலிருந்து பேட்டியளிக்கிறார் எனக் கருணா அதில் குறிப் பிட்டாலும் அவர் அங்குதான் உள்ளாரா என் பதை சுயாதீனமாக உறுதி செய்ய முடிய வில்லை என தமிழோசை குறிப்பிட்டது.
புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணியில் தாம் ஈடுபட்டிருக்கின்றார் என்று இந் தப் பேட்டியில் குறிப்பிட்ட கருணா, அடுத்த ஓரிரு மாதங்களில் அது அமைக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.
Uthayan & sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>