Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருந்தாத யென்மங்கள்!
#1
10ம் திகதி காலை 5.15 மணி... கட்டுநாயக்கா விமான நிலையம்..

கடவுச் சீட்டில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறும் முத்திரை குத்துமிடம்.. ஒரு உத்தியோகத்தர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 20 நிமிடம் எடுத்து தாமதப்படுத்தினார். வெப்பநிலையாலும் வேறு காரணிகளாலும் குழந்தைகள் சிறார்கள் தவிக்க.. அந்த உத்தியோகத்தரோ வெளிப்படையாக முன்னாலுள்ள தீர்வையற்ற கடையில் போத்தல் வாங்கித் தா என கேட்டு ... சிலர் வாங்கி வந்து கொடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.
எனது முறை வந்தது.
கடவுச்சீட்டை உருட்டி புரட்டினார். கிட்ட வா என்றார். பிள்ளைகளின் பெயரையும் பிறந்த திகதியையும் எழுத சொன்னார். கொடுத்த "போம்"ல் இருக்கு என்றேன்.
மீண்டும் எழுத சொன்னார். எழுதினேன்.
"போத்தல்" வாங்கி தராவிட்டால் இப்படி பலதை செய்ய சொல்லி தாமதப்படுத்துவேன் என்றார்.
பரவாயில்லை என்றேன். எனக்கு பின்னால் பலர் பொறுமையற்று தவித்தார்கள். அவர்களுள் ஐரோப்பியர் சிலரும் இருந்தனர். எனக்கு பின்னாலிருந்த ஒரு யேர்மனிய மாது என்ன விசயம் என வினவ, விளங்கப்படுத்த ஆரம்பித்தேன்.
அந்த அதிகாரி.. என்ன சொல்லுறாய் என்றார். "உன்னைப்பற்றி சொல்லுறேன்' என்றேன்.
உடனே கடவுச்சீட்டை தந்து போகச் சொன்னார்.
நான் தீர்வையற்ற கடைக்குள் நுழைய.. அவளவு சனங்களையும் அப்படியே காத்திருக்கவிட்டுவிட்டு.. கடையினுள் ஓடிவந்து.. "மாத்தயா.. ஒரு போத்தல் வாங்கி தாங்க" என கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
நான் அவரைத் திரும்பிப் பார்க்காமலே அங்கிருந்து வெளியேறினேன்.

(இங்குள்ள விசைப்பலகையில் சில எழுத்துக்களை கண்டுபிடிக்க முடியவில்லை... அதனால் சீராக எழுத முடியவில்லை... மன்னிக்கவும்)
.
Reply


Messages In This Thread
திருந்தாத யென்மங்கள்! - by sOliyAn - 07-12-2004, 09:28 AM
[No subject] - by Eelavan - 07-12-2004, 09:37 AM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 09:40 AM
[No subject] - by Paranee - 07-12-2004, 10:50 AM
[No subject] - by kuruvikal - 07-12-2004, 11:18 AM
[No subject] - by tamilini - 07-12-2004, 11:42 AM
[No subject] - by AJeevan - 07-12-2004, 12:34 PM
[No subject] - by Paranee - 07-12-2004, 01:00 PM
[No subject] - by yarl - 07-12-2004, 01:17 PM
[No subject] - by Eelavan - 07-12-2004, 02:21 PM
[No subject] - by AJeevan - 07-12-2004, 02:24 PM
[No subject] - by Eelavan - 07-12-2004, 03:01 PM
[No subject] - by AJeevan - 07-12-2004, 03:25 PM
[No subject] - by sOliyAn - 07-12-2004, 06:16 PM
[No subject] - by kuruvikal - 07-12-2004, 08:47 PM
[No subject] - by vasisutha - 07-13-2004, 12:24 AM
[No subject] - by வெண்ணிலா - 07-13-2004, 09:21 AM
[No subject] - by kavithan - 07-14-2004, 12:47 AM
[No subject] - by kavithan - 07-14-2004, 12:51 AM
[No subject] - by tamilini - 07-14-2004, 10:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)