07-12-2004, 01:18 AM
[u]<b><span style='font-size:30pt;line-height:100%'>சம்பவம் 6</span>
<span style='font-size:23pt;line-height:100%'>
[b]புகழ் </b>என்பது ஒரு போதையூட்டும் விவகாரந்தான். சந்தேகமேயில்லை. புகழ் வந்து சேர்ந்து விட்டால் வாழ்க்கையின் கோலம் அடியோடு மாறிவிடுகின்றது. சுதந்திரம் பறிபோய்விடுகின்றது. இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் நன்றாக அவதானிக்கப்படுகின்றது. பேசுவதில், பழகுவதில், எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அளவுகடந்த ஜாக்கிரதையோடு நடந்து கொள்ள வேண்டி வந்துவிடுகின்றது. ஒரு சறுக்கல் போதும். அகல பாதாளத்தில் விழுத்தி விடும் என்ற எச்சரிக்கை உணர்வு இவர்களை ஆட்கொண்ட வண்ணமே இருக்கின்றது.
விம்பிள்டன் வெற்றி இந்த இளம் அழகியை, புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு அழகோடு திறமையும் சேர்;ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? சைபீரியாவில் பிறந்த 17 வயதான இளம் டென்னிஸ் வீராங்கனையான Maria Sharpova இன் விம்பிள்டன் வெற்றி, இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கப் போகின்றது என்கிறார்கள் அவதானிகள்.
இன்றைய காலகட்டத்தில், விளையாட்டுத்துறையில் பிரகாசித்து, விளம்பரங்களுக்கு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்பவர்கள் பட்டியலில் முன்னிற்பவர் Golf விளையாட்டு மூலம் பலரையும் அசர வைக்கும் Tiger Woods என்ற அமெரிக்கர்தான். 2003ம் ஆண்டில் இவருக்கு விளையாட்டுக்கள், விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம் 44மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் தொகையைத் தொட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த மட்டில் முதல் ஐந்து இடங்களிலும் நிற்பவர்கள் எல்லோருமே டென்னிஸ் வீராங்களைகள்தான். ஆனால் தற்போதைய விம்பிள்டன் சாம்பியன் மரியாவின் வருமானம் இந்த ஐந்து பேரினதும் மொத்தத் தொகைகளை விட அதிகமாக இருக்கப் போகின்றது என்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் Tiger Woods, David Beckham போன்றவர்களையெல்லாம் ஓரங்கட்டி, விளையாட்டு வீரர்களுக்குள் வருமான hPதியாக முதலிடத்தைப் பிடிக்கப் போகின்றார் என்பது வல்லுனர்களின் கணிப்பாக இருக்கின்றது.
அடுத்த 10 வருடங்களில், இந்த இளம் வீராங்கனைக்கு கிடைக்கும் வருமானம் 100 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையைப் பிடிக்கலாம் என்கிறார்கள். அப்பப்பா இது உண்மையிலேயே இராட்சத தொகைதான். இன்று டென்னிஸ் வீராங்கனையான சொPனாதான் முன்னிற்கிறார். இவருக்கு கடந்த 12 மாதங்களில் கிடைத்த வருமானத் தொகை 5.5 மில்லியன் பவுண்ட்ஸ் மாத்திரந்தான். இரண்டாவது இடத்தில் நிற்கும் இவரது சகோதரி வீனஸின் வருமானம் 4.9 மில்லியன் பவுண்டஸ் தொகைதான்.
அப்படி என்னதான் விஷேஷம் இந்தப் புதிய வீராங்கனையில் இருக்கின்றது?
இவருக்கு முன்பு இன்னொரு இளம் ருஷ்ய அழகியான Anna Kournikova பரவலாகப் பலராலும் பேசப்பட்டவர். இந்த டென்னிஸ் வீராங்கனை இதுவரையில் பெரிய அளவிலான எந்த வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரிக்கவில்லை என்பது இவர்மீதுள்ள குறை.. இன்றும் இந்தக் கவர்ச்சியான வீராங்கனை விளம்பரங்கள் மூலம் கடந்த ஒரு வருடததிற்குள் 3.3 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் பெற்றிருந்தாலும், கடந்த ஒரு வருட காலத்தில் எந்தச் சுற்றுப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தன் திறமையை வளர்த்து, வெற்றிக் கிண்ணங்களைச் சுவீகரிக்கும் ஆர்வம் இவரிடம் இல்லை. மாறாக சதையை நம்பியே இவர் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் மரியாவோ முற்றிலும் வேறுபட்டவராக இருக்கின்றார். கவர்ச்சியான இளம் பெண்தான். சந்தேகமே இல்லை. ஆனால் போட்டியில் குதிக்கும் வேகம், எந்த எதிராளிக்கும் முகம் கொடுத்துப் போராடும்; அசாத்திய துணிச்சல் நிறையவே இருக்கின்றது. களத்தில் இறங்கிய வேகத்தில், ஒரு பெரிய எதிராளியை மண் கவ்வ வைத்திருக்கின்றார்.
இது இவரை முற்றிலும் வேறுபட்ட ஒருவராகக் காட்டுகின்றது என்று பலரும் கருதுகின்றார்கள்.
இவர் இன்று இந்த நிலைக்கு வந்ததே ஒரு பெரிய கதைதான். தன்னிடமிருந்த சொத்தான 380 பவுண்ட்ஸ் தொகையுடன். கண்களில் கனவைச் சுமந்தபடி. இவளது தந்தை. இவளுக்கு 7 வயதாக இருக்கும்போது புளோரிடா வந்து சேர்திருக்கின்றார். தாய்க்கு விசா அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை.
தனது 13 வது வயதில் விளம்பர நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட இவள், தனது 14வது வயதில் தொழில்hPதியான டென்னிஸ் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள்.
இன்று பல பெரிய நிறுவனங்கள் இவரை மொய்க்க ஆரம்பித்து விட்டன. உலகப் பிரபல்யமான நைக் காலணி நிறுவனம் ஒரு வருடத்திற்கு, விளம்பரங்களுக்காக 545,000 பவுண்ட்ஸ் தொகைக்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இது ஓர் உதாரணம் மாத்திரமே. மேலும் பல நிறுவனங்களும் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வைத்துள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
சுருங்கச் சொல்வதானால், இவர் காட்டில் சோவென்று பணமழை பெய்ய ஆரம்பித்து இருக்கின்றது. இந்த இளம் ருஷ்ய வீராங்கனையைப்போல, 17வது வயதில் பெரிய வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுத்த, ஜேர்மனிய டென்னிஸ் வீரரான Boris Becker இடமிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கின்றது.
ஜாக்கிரதை என்று எச்சரிக்கும் இவர், இப்படியொரு கட்டத்தில் நாங்கள் மற்றவர்களை அசட்டை செய்தாலும் ,மற்றவர்கள் நம்மை நிமிர்ந்து விததியாசமாகப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள் . விம்பிள்டன் வெற்றி, இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றி விடப் போகின்றது என்று மேலும் கூறுகின்றார்.
புகழின் போதை இவரை எந்த அளவுக்கு மயக்கப் போகின்றது என்று காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.</span>நன்றி
A.J.Gnanenthiran / Swiss
சூரியன் இணையம்

[b][size=18]