07-12-2004, 12:25 AM
<b>உயர் கல்விப் பீடங்களில் பழிவாங்கலா? - யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கிருஷ்ணன் புஷ்பமாலா </b>
-----------------------------------------------------
<img src='http://www.yarl.com/forum/files/crest_large.jpg' border='0' alt='user posted image'>
<b>
"... பழிவாங்கல், கழுத்தறுப்பு நடவடிக்கைகளும், பாலியல் துன்புறுத்தல், பாலியல் சேஷ்டைகள், இலஞ்சம், ஊழல் பணமோசடி, ஊழியர்கள் மீதான இம்ஷிப்பு, இடமாற்றம், போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வேலை நீக்கம் என்பன இங்கு தாராளமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..."</b>
"..இத்தகைய பழிவாங்கல்களுக்கு சாதாரண ஊழியர்களில் இருந்து கல்வி கற்கும் மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பததான் வேதனையான விடயமாகும்...:
குடாநாட்டை படையினர் கைப்பற்றிய பின்னர் குடா நாட்டில் ஏற்பட்ட நிர்வாகச் சீர்குலைவு புரிந்துணரவு ஒப்பந்தம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாகியும் அந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன.
குறிப்பாக குடாநாட்டிலுள்ள அரச திணைக்களங்களிலேயே இந்நிலைமை அதிகரித்து காணப்படுகின்றது. சாதாரண பாடசாலைகளில் இருந்து உயர்கல்விக் கல்லூரிகள்., அரச திணைக்களங்கள் வரை தலைவிரித்தாடுகின்றன.
பழிவாங்கல், கழுத்தறுப்பு நடவடிக்கைகளும், பாலியல் துன்புறுத்தல், பாலியல் சேஷ்டைகள், இலஞ்சம், ஊழல் பணமோசடி, ஊழியர்கள் மீதான இம்ஷிப்பு, இடமாற்றம், போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வேலை நீக்கம் என்பன இங்கு தாராளமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
குடாநாட்டிலுள்ள எந்த திணைக்களம் எந்த மோசடியை செய்கிறது என்பதை இதில் குறித்து காட்ட விரும்பவில்லை. ஆனால் எந்த எந்த திணைக்களங்கள் இந்த மோசடிகளைச் செய்கின்றதென யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்.பொலிஸ் நிலையம்,விடுதலைப்புலிகள் அரசியல் அலுவலகங்கள், நீதிமன்ற வழக்குகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஏனெனில் திணைக்களங்களையும், அலுவலகங்களையும் பெயர் குறிப்பிட்டு இப்பந்தியை வரைந்தால் அங்கு பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளின் பெயருக்கு களங்கமும், அவர்களுக்கு மன உளைச்சலும் கொடுக்கலாம் என்ற காரணத்தினால் தவிர்க்கப்பட்டுள்ளன.
இத்தகைய பழிவாங்கல்களுக்கு சாதாரண ஊழியர்களில் இருந்து கல்வி கற்கும் மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பததான் வேதனையான விடயமாகும்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியான கிருஷ்ணன் புஷ்பமாலா என்ற மாணவியே பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தவர். யாழ்.மருத்துவ பீடம் நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்காலும் யாழ்.பல்கலைகழக நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டாலும் எனது மருத்துவக் கல்வி பாதிக்கப்பட்டமையால் அதற்காக நியாயம் கோரியே இப்போராட்டத்தை நடத்துவதாக அந்த மாணவி தெரிவித்தார்.
யாழ்.மருத்துவ பீட 95/FM/19 அணியைச் சேர்ந்த மாணிவியான இவருடன் கற்ற மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறி இருக்கும் போது இவர் மட்டும் பழிவாங்கலுக்குட்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றார். இதேவேளை, இவர் நிர்வாகத்திற்கு எதிராக செய்த குற்றங்கள் என்ன என்பதை இதுவரை நிர்வாகம் வெளியிடவில்லை. நாம் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் அதை தவிர்த்தனர்.
2001ம் ஆண்டிலிருந்து இன்று வரை மருத்துவக் கல்விக்குரிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்ட நிலையில் பாதிப்புக்குட்பட்டுள்ள மாணவியின் நிலையை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பேராசிரியர்களோ விரிவுரையாளர்களோ கண்டும் காணாதிருப்பது ஏன்?
<b>பரீட்சை விடயத்தில் இம்மாணவி மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்தப்பட்டதா குறிப்பிடுகிறார். மூன்று தடவைகள் பரீட்சையில் இவர் மிகவும் பழிவாங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.</b>
இது குறித்து யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவுக்கு மாணவியால் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது. மாணவிக்குரிய உரிமையை நிர்வாகம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவருக்குரிய உரிமைகள் எவையும் கொடுக்கப்படுவதில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை நிர்வாகம் இவரை மாணவியாக ஏற்கவில்லை. இதனால், நூலகத்தையோ அல்லது ஏனைய கற்றல் சம்பந்தமான விடயங்களையோ பயன்படுத்த முடியாத நிலைக்கு இம் மாணவி தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து பழிவாங்களுக்கு உள்ளாகும் தன்னை தொடர்ந்து கல்வி பயில்வதற்கு ஒரு தெளிவான, பயமற்ற, சந்தோஷமான கல்வியை தொடர்வதற்கு வேறு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் சிபார்சைக் கோரிய போதும் அதுவும் இவருக்கு கிட்டவில்லை.
இவையெல்லாம் ஒரு பெறுமதி கற்றல் காலத்தை வீணாக்கியுள்ளது எனவும் தன் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது எனவும் மாணவி விசனப்படுவது நியாயமானது.
யுத்த காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி எதிர்கால சமூகத்தில் நற்பிரஜையாக முன்வர வேண்டும் என்ற கனவோடு வந்த இந்த மாணவிக்கு நீதி கிடைக்குமா?
தனது உரிமையைக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இம் மாணவியை மருத்துவ பீடமோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகமோ சந்தித்து பிரச்சினை குறித்து கேட்கவோ அல்லது தீர்க்க முயற்சி எடுக்கவோ இல்லை. ஏன்? <b>பிச்சைக்காரனானால் அது பூர்வ ஜென்மத்தில் செய்த பாவம். </b>
அதிகாரியினால் அது இனி மேல் செய்யப் போகும் பாவம்.
<b>தமது சக தோழி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொறுக்க முடியாத பல்கலைக்கழக சலக பீட மாணவர்களும் ஒன்றிணைந்து இம் மாணவிக்கு நியாயமான தீர்வு கிட்டும் வரை தமது விரிவுரைகளை பகிஷ்கரித்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை யாழ்.வைத்தியசாலையில் சேர்ந்துள்ளனர்.</b>
எனினும் மாணவியின் கோரிக்கைள் நியாயமானவை எனவும் அவற்றை நிறைவேற்றுவதற்க்கு நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்மோகனதாஸ் தெரிவித்த போதும் இந்த மாணவியின் கோரிக்கைகளில் ஒன்றான ஏற்கனவே தான் எழுதிய பரீட்சைத் தாள்கள் மீழ் திருத்தம் செய்வதற்கு மருத்துவ பீட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால் <b>தமது பதவிகளை இராஜிநாமா செய்வதாக பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்</b>.
சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் இத்தகு உயர்கல்விப் பீடங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூக நலன் ஆளுமையுள்ள தனிநபர் உருவாக்கல் கருதி தகுந்த முடிவுகளை வெளியிட வேண்டும்.
<b>எதையுமே நாம் போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோமா?</b>
ஏனெனில் இத்தனை போராட்டத்தின் பின் தற்போது மாணவியின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கென, துனை வேந்தர் தலைமையில் அனைத்து பீடங்களையும் சார்ந்த பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவ பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன..
ஜெகன் தினக்குரல்
சூரியன்இணையம்

[b][size=18]