Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உறங்கா விழிகள்
#20
முதல் கவிதை வரைந்து சில
நாட்களில் இந்த கவிதையும் வரையவேண்டியதாகிவிட்டது.

[size=18]<b>நெய்தலை பாலையாக்கிவிடு</b>

இந்த உலகத்திலை எல்லாத்திற்கும் ஒரு விலை இருக்கு விலை மதிக்க முடியாதது கண்ணீர் மட்டும்தான் நீ சிந்திற கண்ணீரிற்கு ஒரு அர்த்தம் இருக்கணும் சரியான காரணம் இருக்கணும் உன்னைமாதிரி பெண்கள் என்னை மாதிரி ஆண்களை அழவைக்கவேண்டுமேயொழிய நீங்கள் அழக்கூடாது - ஜெய் திரைப்படம்



<img src='http://www.bekkoame.ne.jp/~t.s.hawk/jpg/takaq022.jpg' border='0' alt='user posted image'>
உன் விழி விதைக்கும்
கண்ணீர் முத்து தரைசேரமுன்னம்
என் கரம் அதை ஏந்தும்
நீ அழுவதற்காக நான் காதலிக்கவில்லை
உன்னை அழகாக்கவே காதல் செய்தேன்

விழியோடு நிறைந்த நீர் இனி
வற்றிப்போகட்டும் ஆனந்தத்தில்கூட
நீ அழுதிடக்கூடாது
புூக்கள் அழுது இந்த புூமி பார்த்தில்லை
நீ அழுது இனி நான் பார்க்ககூடாது

அழுதிடத்தோன்றினால் என்னை நினை
உனக்காய் நான் அழுதுகொள்கின்றேன்
புூவிற்காய்த்தானே இந்த வானம் அழுகின்றது
உனக்காய் அழுவதால் நான் உற்சாகம் பெறுகின்றேன்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்தானே காதல்
வாழ்க்கை கசப்பின்றி இனிதே நகர்கின்றது

பனித்துளி வீழ்ந்து நிற்பதால்
மலர்கள் அழுவதாய் கற்பனை செய்யும்
கவிஞர் கூட்டம் கவி மனம் தெளியவேண்டும்
உனக்காய் நான் அழுது
உனக்காய் நான் உதிர்ந்து
விளக்கம் சொல்வேன்

தண்ணீரில் மீன்கள் அழுவதில்லை
அழுதாலும் யாரும் அறியப்போவதில்;லை
என் மனதோடு நீ வாழும்போது
நீ அழக்கூடாது உனக்காய்
நான் அழுவேன் யாரும் அறியப்போவதில்லை
கடலில் சேர்ந்த நதி எதுவென
பிரிகை பார்க்க முடியாது
என் கண்ணீரிலும் யாரும் பேதம் பார்க்கமுடியாது
அழுவது நான் உனக்காக அது
எனக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும்

இன்றுமுதல்
இம்மடல் உன் கரம் கிடைக்கும்போது
நெய்தலாய் நிற்கும் விழியை பாலையாக்கிவிடு
காரணம் எதுவாகினும் உன்
கண்ணீர் சிந்திவிடக்கூடாது
அர்த்தம் இருந்தாலும்
உன் அழும்விழி நான் காணக்கூடாது

எனக்காய் இதை செய்துகொள்
உனக்காய் நான் எதுவும் செய்வேன்
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 07-08-2004, 04:22 PM
[No subject] - by shobana - 07-08-2004, 05:05 PM
[No subject] - by இளைஞன் - 07-08-2004, 10:29 PM
[No subject] - by AJeevan - 07-08-2004, 11:15 PM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 01:23 AM
[No subject] - by Mathivathanan - 07-09-2004, 01:45 AM
[No subject] - by sWEEtmICHe - 07-09-2004, 04:18 AM
[No subject] - by kavithan - 07-09-2004, 05:27 AM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 06:28 AM
[No subject] - by Paranee - 07-09-2004, 10:29 AM
[No subject] - by Paranee - 07-09-2004, 10:32 AM
[No subject] - by Paranee - 07-09-2004, 10:35 AM
[No subject] - by Paranee - 07-09-2004, 10:39 AM
[No subject] - by இளைஞன் - 07-09-2004, 11:25 AM
[No subject] - by Paranee - 07-09-2004, 11:54 AM
[No subject] - by இளைஞன் - 07-09-2004, 12:40 PM
[No subject] - by sWEEtmICHe - 07-09-2004, 02:58 PM
[No subject] - by kuruvikal - 07-09-2004, 05:39 PM
[No subject] - by Paranee - 07-11-2004, 09:32 PM
[No subject] - by tamilini - 07-11-2004, 09:49 PM
[No subject] - by Paranee - 07-11-2004, 09:54 PM
[No subject] - by tamilini - 07-11-2004, 09:57 PM
[No subject] - by வெண்ணிலா - 07-13-2004, 12:10 PM
[No subject] - by இளைஞன் - 07-13-2004, 12:11 PM
[No subject] - by kuruvikal - 07-13-2004, 03:12 PM
[No subject] - by tamilini - 07-13-2004, 06:04 PM
[No subject] - by வெண்ணிலா - 07-13-2004, 07:14 PM
[No subject] - by tamilini - 07-13-2004, 09:04 PM
[No subject] - by kavithan - 07-14-2004, 12:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)