07-11-2004, 06:25 PM
பலம் மிக்க ஆணை ஒன்றை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு விடுத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்திருப்பதாக ஐ.தே.க. தெரிவிப்பு
பொதுத் தேர்தலிலும் பார்க்க தமக்கு பலம் மிக்க ஆணையை ஒன்றை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு விடுத்த வேண்டுகோளை மக்கள் நிராகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வெளியான முடிவுகள் இதனை உணர்த்துவதாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாண சபைத் தேர்தலின் மூலமாக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்வதற்கு ஏனைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்த போதிலும் கூட்டமைப்பு அரசு இதனை இரண்டாவது பொதுத் தேர்தலாக கருதி செயற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலில் மூலமாக தமக்கு கூடுதல் பலத்தை வழங்குமாறு கூட்டமைப்பு அரசு கோரியிருந்தது.
எனினும் பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் இம்முறை நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலேயே மிகக் குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினதும் மக்கள் விடுதலை முன்னியினதும் வாக்குறுதி அரசியல் காரணமாக சர்வஜன வாக்களிப்பு நிலையிலிருந்து மக்கள் விலகிச் செல்லும் நிலை தோன்றியிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>