07-11-2004, 06:10 PM
மக்கள் ஆணையை மகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி, பிரதமர் தெரிவிப்பு
ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூலமாக கூட்டமைப்புக்கு கிடைத்த மக்கள் ஆணையை மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறுகிய காலத்தில் இந்த வெற்றி கிடைத்திருப்பதாக மாகாண சபைத் தேர்தல் வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் ஏழு மாகாணங்களது ஆட்சிப் பொறுப்பு கூட்டணியிடம் சேர்ந்திருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறைமையின் மூலமாக பாராளுமன்ற அதிகாரம் என்ன வகையாக அமைகின்ற போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு உரிய அதிகாரம் இருப்பது இம்முறை மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள ஆணை தொடர்பான யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் தாம் கோருவதாகவும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
எந்த வேலைத் திட்டங்களுக்கு அல்லது அரசாங்க கொள்கைகளுக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்பது இந்த தேர்தலில் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே சகலவிதமான வாதப் பிரதிவாதங்களையும் கைவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது இன்று அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ
ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆறு மாகாணங்களில் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலமாக இது உறுதிப்படுத்தப்பட்டதாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குரை புரண்டோடும் ஆற்று நீரை தடுத்து நிறுத்த முடியாது என்று முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தெரிவித்த கூற்று மாகாண சபைத் தேர்தலின் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய சூழ்நிலையில் நாட்டை முன்னோக்கிச் கொண்டு செல்வதற்கு வகுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு நாட்டு மக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் தோன்றியிருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>