07-11-2004, 06:09 PM
எம்மை நசுக்கி அழிக்க முற்பட்ட எதிரியை துரத்தி அழிக்கும் நிலைக்கு இன்று நாம் வளர்ந்திருக்கிறோம்: கேணல் சூசை
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய வழிகாட்டலில் கரும்புலி மாவீரர்களின் தாக்குதல் திறனால் எம்மை நசுக்கி அழிக்க முற்பட்ட எதிரியை துரத்தி அழிக்கும் நிலைக்கு இன்று நாம் வளர்ந்திருக்கிறோம் என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நேற்று கிளிநொச்சி காந்தரூபன் அறிவுச்சோலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே கேணல் சூசை அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருகாலப் பகுதியில் சிங்கள இராணுவம் எம்மைத் துரத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது நாம் எம்மை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையினை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.
ஆனால் இன்று எமது தேசியத் தலைவர் அவர்களுடைய வழிகாட்டலில் கரும்புலி மாவீரர்களின் வீரமிகு தாக்குதல் திறனால் எதிரியை துரத்தியழிக்கும் நிலைக்கு நாம் இன்று வளர்ந்திருக்கிறோம். அந்த வகையில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வழிகாட்டியாக அமைந்துள்ளார்கள் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் அவர்கள் கருத்துரைக்கையில், காந்தரூபன் அறிவுச்சோலைக்கு புலம்பெயர்ந்த நோர்வே மக்கள், அமைப்புக்கள் பல்வேறு உதவிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது.
எதிர்காலத்தில் இவ்வாறான அறிவுச்சோலைகளின் ஊடாக நமது சிறார்களின் நலன்களைப் பேணுவது, வீரகாவியமான மாவீரர்களின் எண்ணங்களை நிறைவு செய்வதாகவே அமையும் எனவும் கா.வே. பாலகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>